India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எக்காரணத்தை கொண்டும் அறிமுகமில்லாத நபர்களிடம் வங்கியின் தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தங்களின் வங்கி விவரங்களை கேட்டு பணத்தை முழுவதும் மோசடி செய்யும் கும்பல் அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் வங்கி கணக்கை கையாளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கீழச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மனைவி கல்பனா நேற்று மதியம் 1 மணியளவில் கிணற்றிற்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையுடன் கிணற்றில் விழுந்துள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இருவரது உடலையும் மீட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, செங்கல்பட்டு மாவட்டதில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர், ஸ்ரீபெரும்புதூர், கல்பாக்கம், மாமல்லபுரம், கேளம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஏரியாவில்?
மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய திருவிழா 22.12.2024 முதல் 20.01.2025 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அறிவுறுத்தலின்படி செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சார் ஆட்சியர் நாராயண சர்மா தலைமையில் நடைபெற்றது. இதில், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
மறைமலை நகரைச் சார்ந்தவர் கோமதி இன்று காலை 10:40 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கோமதியின் கழுத்தில் இருந்த நான்கு சவரன் தங்கச் செயினை பறித்து தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
யூடியூப் செயலியில் வரும் தொழில் தொடங்குவது அல்லது பணம் சம்பாதிப்பது தொடர்பான விளம்பரங்களை கண்டு 3ஆம் ரக செயலிகளை பதிவேற்றம் செய்ய வேண்டாம் எனசெங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உங்களைப் பற்றிய சுயவிவரங்களை தெரிந்து கொண்டு மிரட்டுவதும், வங்கியில் நூதன முறையில் மோசடியும் நடந்து வருகிறது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (டிச.18) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில், காலை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. பல்லாவரம், மீனம்பாக்கம், திரிசூலம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், அச்சிறுபாக்கம், சிட்லபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோர் சிரமம் அடைந்து வருகின்றனர்.
கைவினைக் கலைஞர்கள் தொழில் முனைவோர்களாக உயர்த்தும் நோக்கில் ரூ.50,000 மானியத்துடன் மூன்று லட்சம் வரை கடன் உதவி கலைஞர் கைவினை திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் பயன்படும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பயன்பெற விரும்புவோர் www.msmeonline.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு கோட்டங்களிலும் வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் மற்றும் மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை கூறி நிவாரணம் மற்றும் பதில்களை பெற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருப்போரூர் வட்டத்திற்கு உட்பட்ட செம்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மாணவ, மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்து மதிய உணவு வழங்கினார். கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் உதயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.