Chengalpattu

News February 9, 2026

செங்கல்பட்டு இன்று இரவு வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

செங்கல்பட்டு இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 9, 2026

செங்கல்பட்டு இன்று இரவு வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

செங்கல்பட்டு இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 8, 2026

செங்கை: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card போன்ற Spam Calls வந்தாலே, செம கடுப்பாகும். செங்கல்பட்டு மக்களே, இனி டென்ஷன் வேண்டாம். தேவையில்லாத அழைப்புளை ஈசியாக தவிர்க்கலாம். ஆம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம் (அ) ‘START 0’ என 1909-க்கு SMS அனுப்பினால் Spam Call-ல் வரவே வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 8, 2026

தாம்பரம்: திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

image

பயணிகளின் வசதிக்காக திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் (06190) சேவை வரும் பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் இயங்கும் இந்த ரயில், மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். குறைந்த கட்டணத்தில் (ரூ.120 – ரூ.160) முன்பதிவு வசதியுடன் கூடிய இந்தச் சேவையைத் தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பயணிகள் இனி வரும் நாட்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

News February 8, 2026

செம்மஞ்சேரி: தகராற்றில் ஒருவருக்கு கத்தி குத்து

image

செம்மஞ்சேரி சுனாமி நகரைச் சேர்ந்த சிவா (30) என்பவர், நேற்று முன்தினம் தனது மனைவியைக் காணச் சென்றபோது அங்கு சூர்யா (22) என்பவரைச் சந்தித்ததில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூர்யா, சிவாவை கத்தியால் வயிற்றில் குத்தினார். படுகாயமடைந்த சிவா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சூர்யாவை செம்மஞ்சேரி போலீசார் நேற்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 8, 2026

செங்கை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, செங்கை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க.

News February 8, 2026

செங்கை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக் <<>>செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News February 8, 2026

செங்கல்பட்டு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

செங்கல்பட்டு மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள்(ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News February 8, 2026

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து!

image

சோழிங்கநல்லூரில் ஓ.எம்.ஆரில், ஐ.டி. ஊழியர்களை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. முன் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த கார், டெம்போ டிராவலர் மற்றும் மற்றொரு லாரி மோதின. இதில் மூன்று வாகனங்களும் சேதமடைந்தன. ஓட்டுநர்கள் மற்றும் ஐ.டி. ஊழியர்கள் காயமின்றி தப்பினர். போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News February 8, 2026

செங்கல்பட்டு: கடையில் பற்றி எரிந்த தீ!

image

பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூர் முருகன் கோவில் அருகே செந்தில் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு பழக்கடை மற்றும் மற்றொரு பகுதியில் ஒரு சிப்ஸ் கடை நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், திடீரென பயங்கரமாக தீ பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் ரூ.5 லட்சம் மதிப்பு உள்ள பொருட்கள் நாசமாகின.

error: Content is protected !!