Chengalpattu

News December 25, 2024

செங்கல்பட்டு அருகே சிறுவன் நீரில் மூழ்கி மரணம் 

image

திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம், கேளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல்.இவரது மகன் சாய் தர்ஷன், (8); அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தார். வீட்டில் இருந்த சிறுவன், நேற்று முன்தினம் இரவு காணவில்லை. நேற்று, அப்பகுதியில் உள்ள கேளியம்மன் கோவில் குளத்தில், சிறுவன் இறந்து மிதந்து கிடந்தார்.கேளம்பாக்கம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News December 24, 2024

குடிபோதையில் பயணம் செய்ய வேண்டாம்

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து பிரிவு போலீசார், குடிபோதையில் பயணம் செய்ய வேண்டாம். உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் தங்களுக்கான ஒரு குடும்பம் உள்ளது என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு குடித்துவிட்டு வானம் ஓட்ட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ஷேர் பண்ணுங்க.

News December 24, 2024

தாம்பரம் ரயில் நிலையத்தை மறுசீரமைக்க கோரிக்கை 

image

பல ஆண்டுகளாக தாம்பரம் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யாமல் தாமதப்படுத்தி வருவதால் தெற்கு ரயில்வே மீது பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தாம்பரம் ரயில் நிலையத்தின் மறு சீரமைப்பு பணிகளுக்காக 2020ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் ஒன்று எடுத்தது. ஆனால், தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் நடைபெறாமல் உள்ளது. பயணிகளை உடனடியாக துவங்க கோரிக்கை எழுந்துள்ளது. 

News December 24, 2024

மண்புழு உரம் தயாரிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதலமைச்சரின் “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்து மண் வளத்தினை மேம்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு மண்புழு உரப்படுகை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட வேளாண் இயக்குநர் பிரேம் சாந்தி தெரிவித்துள்ளார். ஒரு விவசாயிக்கு 2 மண்புழு உரப்படுகை 50% மானியத்துடன் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு உழவன் செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். 

News December 24, 2024

களைகட்டி வரும் மாமல்லபுரம் 

image

மாமல்லபுரத்தில், அதிக அளவில் உணவு விடுதிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும். தற்போதும் விளக்குகள் பிரகாசிக்கும் பரந்த புல்வெளி பகுதியில் சைவ, அசைவ உணவுகள், மது விருந்து, இசை, நடனம் என, கேளிக்கை கொண்டாட்டத்திற்கு விடுதி நிர்வாகம் தயார்படுத்தி வருகின்றன. இதில், முன்பதிவும் அதிகரித்து வருவதால், விடுதி நிர்வாகத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News December 24, 2024

அடிப்படை வசதிகள் செய்ய ரூ.27.29 கோடி நிதி ஒதுக்கீடு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகள் உள்ளன. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 69 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அடிப்படை வசதிகள் செய்ய ரூ.27.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. திட்ட பணிகள் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் கான்கிரீட் சாலை, ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், சிமென்ட் சாலை, ஊராட்சி அலுவலகம், மழைநீர் கால்வாய், சிறுபாலம் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

News December 24, 2024

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திசை திரும்பியது

image

வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு ஆந்திர மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. இது, இன்று தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகக் கரையை நெருங்கி வரக்கூடும். இதனால், இன்று செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக கடலோரப் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

News December 24, 2024

செங்கல்பட்டில் நாளை குறை கேட்பு கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(டிச.23) மாலை 3 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நள்ளிரவு மையத்தில் மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் தலைமையில் குறை கேட்டு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார். இந்த குறை கேட்பு கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.

News December 23, 2024

படூர் பகுதியில் உலக சாதனை நிகழ்த்திய UKG சிறுவன்

image

படூர் ஊராட்சியில் வசித்து வரும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் – அருணா தம்பதியரின் இளைய மகன் ரக்ஷன் (6) தனியார் பள்ளியில் UKG படித்து வருகிறார். இவர் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு 25 மீட்டர் தூரத்தை 33 வினாடிகளில் நீச்சலடித்து கடந்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இவரை பலரும் பாராட்டி வருகின்றனர். நாமும் பாராட்டலாமே. ஷேர் பண்ணுங்க. 

News December 23, 2024

இழப்பீடு தருவதாக பயணிகளிடம் பேசும் மோசடி கும்பல்

image

விமானங்கள் தாமதம் அல்லது ரத்து போன்றவைகளால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு, இழப்பீடுகள் கொடுக்கப்படுவதாக பயணிகளை ஏமாற்றும் மோசடி கும்பல் அதிகரித்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தில் இருந்து பேசுவது போல், போலியான செல்போன் அழைப்புகள் மூலம் பயணிகளிடம் பேசி அவர்களின் ஆதார் பான் வங்கிக் கணக்கு விவரங்களை சேகரிக்கும் மோசடி கும்பல் குறித்து, இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!