India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பவுஞ்சூர் அடுத்த லத்துார் கிராமம் முதல் தெருவைச் சேர்ந்த சந்தோஷ் (30) தனது நண்பர் கார்த்திக் உடன் நேற்று மாலை மாருதி பெலினோ காரில், பவுஞ்சூரில் இருந்து மதுராந்தகம் நோக்கிச் சென்றார். ஜமீன் எண்டத்துார் கிராமத்திலுள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது, சாலையின் வலதுபுறம் இருந்த இலுப்பை மரத்தில் பலமாக மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில், சந்தோஷ், கார்த்திக் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் பகுதியை சார்ந்தவர் தினேஷ்(36). கேபிள் டிவி ஆபரேட்டரான இவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அதிகமாக குடித்துள்ளார். இதில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னையில் இருந்து 107 பயணிகள் உட்பட 113 பேருடன் பெங்களூர் புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் பறந்தபோது விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு 113 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
குறைந்த வட்டியில் கடன் தருகிறோம் என பொய்யாக விளம்பரப்படுத்தும் மூன்றாம் ரக செயலிகளில் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். தங்களின் ஆதார் மற்றும் ஆவணங்களை தவறாக சித்தரித்து மிரட்டி பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் அண்மையில் அதிகளவில் நடைபெறுகின்றன. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஷேர் செய்யுங்கள்
சாலை பயணம் மேற்கொள்வோர்களுக்கு, நாளுக்கு நாள் சாலை பயணம் கடினமாகி வருகிறது. விபத்துக்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. பொதுமக்களின் அஜாக்கிரதை காரணமாக விபத்துக்கள் நடப்பதாக போலீசார் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பயணம் செய்யும் நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதை தவிரத்து பாதுகாப்பான பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வீர் என காவல்துறை சார்பில் போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி அதிகாலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவுக் கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு பகுதிகளை சுனாமி தாக்கியது. இதில், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோரைக் காணவில்லை. தமிழ்நாட்டில் சுனாமி தாக்குதலால், சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 3 உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அடுத்த புத்தகத்துறை பகுதியில் கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நெற்குன்றத்தைச் சேர்ந்த கணபதி, பாலா (10), ஹேமா (12) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், கேளம்பாக்கம், பெருங்களத்தூர், அனகாபுத்தூர், பம்மல், சேலையூர், மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தரைத் தளம் ‘டி’ பிளாக்கில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் இந்த டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 27.12.24 வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. இதில் விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.
அரசு பணியில் இருந்தபோது அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுப்புற சூழல் பொறியாளர் உமயகுஞ்சரம், அவரது மனைவி, 57, தந்தை ராமலிங்கம் 87, தாய் அரிவானந்தகோமதி 85, ஆகியோருக்கு, செங்கல்பட்டு நீதிமன்றம், நேற்று தண்டனை வழங்கியது. இதில் பொறியாளர் உமயகுஞ்சரம், அவரது மனைவிக்கு இரண்டு ஆண்டுகள் சிறையும், தந்தை ராமலிங்கம்,தாய் அரிவானந்தகோமதிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.