India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையம் சார்பில் நடைபெற்ற தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கல்விக்கடன் முகாமில் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் 1,852 நிறுவனங்களுக்கு ரூ.476.07 கோடி மதிப்பீட்டில் தொழிற் கடன் மற்றும் கல்வி கடன்களை வழங்கினார்.
நாளை மறுநாள் தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு வரும் வழிகள் குறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “எல்லா பார்க்கிங் வசதிகளும் காவல்துறையினர் வழிகாட்டுதல்களின் பேரில் தனித்தனியாக ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இருந்து வருபவர்களுக்கு ஒரு வழியும், மற்ற பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு ஒரு வழியும் ஏற்பாடு செய்துள்ளது” என்று கூறினார்.
சென்னை, தாம்பரம் தர்கா சாலையில் பொதுமக்கள், சேதமடைந்த பாலத்தை சீர் செய்யவும், மழைநீர் வடிகால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டுஎன வலியுறுத்தி சாலை மறியல் செய்து வருகின்றனர். அலுவலக நேரத்தில் மறியல் நடைபெறுவதால், வாகனங்களில் வருபவர்கள் கடும் போக்குவரத்து பாதிப்பால் சிரமம் அடைந்தனர். இதனால் மறியல் செய்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார், போக்குவரத்தை சீர் செய்ய முயற்சித்தனர்.
கோவிலம்பாக்கம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணி புரிந்தவர் நூத்தஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மாறன் (33). இவர், நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் அடுத்த சாலவான்குப்பம் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு பைக்கில் சென்றார். அப்போது, பட்டிபுலம் அருகே எருமை மாடு குறுக்கே வந்ததால் அதன் மீது பைக் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இரும்புலியூரைச் சேர்ந்தவர் விவேக் ராஜ் (28). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, ஆள் கடத்தல், வழிப்பறி, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியான இவரை, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். சீசிங் ராஜாவை போல் தன்னையும் என்கவுண்டர் செய்து விடுவார்களோ என்ற பயத்தில், அவராகவே, தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், செங்கல்பட்டு மாவட்டம் 2ஆம் இடத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலிடமிருந்து மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் (வெற்றி கோப்பையை) முதலமைச்சர் கோப்பையை விளையாட்டு வீரர்களுடன் பெற்றுக் கொண்டார். விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்டத்தில் 13 துணை தாசில்தார்கள், அண்மையில் காவல்துறை பயிற்சிக்கு சென்றனர். இந்நிலையில், அவர்கள் பயிற்சி முடித்து பணிக்கு திரும்பினர். அதன்பின், காவல்துறை பயிற்சி முடித்த 13 துணை தாசில்தார்கள் உட்பட 26 துணை தாசில்தார்களுக்கு, தாலுகா அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயம், மண்பாண்ட தொழில் பயன்பாட்டுக்காக 641 நீர்நிலைகளிலிருந்து களிமண், வண்டல் மண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படவுள்ளது. தேவைப்படுவோர் tnesevai.tn.gov.in (இணையதள முகவரி) வாயிலாக சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு, வரும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து நியாய விலைக் கடைகளும், பகுதிநேர ரேஷன் கடைகளும், அன்றைய தினம் முழுவதுமாக செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் நியாய விலைக் கடையில் தேவையான பொருட்களை தவறாமல் வாங்கி கொண்டு தீபாவளியை சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்!
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 25) ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளதாக ஆட்சியர் ச.அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம்.
Sorry, no posts matched your criteria.