Chengalpattu

News November 3, 2024

த.வெ.க செயற்குழு கூட்டம்: 26 தீர்மானங்கள் நிறைவேற்றம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், தலைவர் விஜய் தலைமையிலும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையிலும் செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 26 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மேலும், சமீபத்தில் மாநாடு நிகழ்ச்சிக்கு வந்த நிர்வாகிகள் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News November 3, 2024

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை விமான நிலையத்திற்கு, நள்ளிரவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை நாய்கள் உதவியுடன் விடிய விடிய மோப்ப சோதனைகள் நடத்தினர். அதன்பின், அது புரளி என்று தெரிய வந்தது. விமான நிலைய போலீசார் வழக்குபோல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 3, 2024

சரணாலயத்தில் வலசை பறவைகள் அதிகரிப்பு

image

மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பகுதியில், புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு உடையது. தற்போது, வங்கதேசம், மியான்மர், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வலசை பறவைகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. இங்கு செப்., மாத கடைசி வாரத்தில், வலசை பறவைகள் வர தொடங்கும். ஆனால், தற்போது அக்., மாதத்தின் தொடக்கத்தில் 2,500 பறவைகள் வந்துள்ளன.

News November 3, 2024

சேட்லைட் போன் கொண்டு வந்த பயணி கைது

image

இந்தியாவில் தடை செய்யப்பட்ட சேட்லைட் போனுடன், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் பயணம் செய்ய முயன்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பயணி டேவிட் (51), சென்னை விமான நிலையத்தில் சிக்கினார். சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், சேட்லைட் போனை பறிமுதல் செய்து, அமெரிக்க பயணியின் சிங்கப்பூர் பயணத்தையும் ரத்து செய்து, மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

News November 3, 2024

செங்கல்பட்டில் இன்று கனமழை பெய்யக்கூடும்

image

செங்கல்பட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் வெளியே செல்பவர்கள் குடை, ரெயின் கோட் எடுத்துச் செல்லுங்கள். தாழ்வான பகுதி மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்குமென்பதால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லுங்கள்.

News November 3, 2024

காட்டாங்கொளத்தூர் – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள்

image

சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, காட்டாங்கொளத்தூரில் இருந்து நாளை (நவ.4) காலை 4, 4.30, 5, 5.45, 6.20 மணிக்கு தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5.05 மணி மற்றும் 5.40 மணிக்கு காட்டாங்கொளத்தூருக்கு 2 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

News November 3, 2024

விரைவில் வரும் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம்

image

தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரில், ரூ.42 கோடி செலவில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டுமான பணிகள், 95% நிறைவுற்றுள்ளது. கூடிய விரைவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதனால், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

News November 3, 2024

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால், உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை குறுக்கிடாததால், உள்ளூர் வியாபாரிகள் நன்றாக வியாபாரம் செய்தார்கள்.

News November 2, 2024

செங்கல்பட்டில் விதியை மீறி பட்டாசு வெடித்த 16 பேர் மீது வழக்கு

image

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக காலை 6:00 மணி முதல் காலை 7:00 மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. நேர கட்டுப்பாட்டை மீறி மற்றும் பொது இடங்களில் பட்டாசு வெடித்தவர்கள் மீது செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News November 2, 2024

தாம்பரம் மாநகராட்சியில் 29 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

image

தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட 70 வார்டுகளிலும் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் பட்டாசு கழிவுகள் குவிந்து காணப்பட்டது. இதனை அகற்றும் பணிகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று, 340 வாகனங்களில், 1546 பணியாளர்கள் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். 29 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!