India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுராந்தகத்தில் உள்ள ‘கற்பக விநாயகர் பொறியியல் கல்லூரியில்’ மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள் கண்காட்சி இன்று (நவ.5) முதல் 3 நாட்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யும் அப்பளம், ஊறுகாய், சானிடரி நாப்கின், சணல்பை, சுடிதார் போன்றவற்றை வாங்கி பயன்பெறுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் ரூ.42 கோடி செலவில் புதிதாக ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அது, இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்துள்ளார். இங்கு 120 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று செல்லும் வகையில் பல்வேறு நவீன வசதிகளும் இடம்பெற்றுள்ளன என்றும், இது திறக்கப்பட்டபின் கிளாம்பாக்கத்தில் சற்று நெரிசல் குறையும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருப்போரூரில், பேரூராட்சி சார்பில் குடிநீருக்காக பள்ளம் தோண்டப்பட்டது. பணி முடிந்து பள்ளத்தை மூடவில்லை. இந்நிலையில், ஆமூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (30) தனது மகன் மோகித்தை (2) அழைத்துக் கொண்டு பைக்கில் திருப்போரூர் நேற்று சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த மோகித், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு நேற்று காலை சென்னைக்கு வரத்தொடங்கினா். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோா் சென்னைக்குள் வந்ததால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பரனூா் முதல் வீராபுரம் வரை சுமாா் 2 கி.மீ. தூரத்துக்கு 2ஆவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சென்னை திக்கு முக்காடி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (நவ.5) மாலை 3 மணியளவில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் குறை கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர் அன்பரசன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம்.
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பம்மல், அனகாபுத்தூர் பகுதி மக்கள் பயன்படும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான விழா விரைவில் நடைபெற இருக்கிறது. விழா நடத்துவது தொடர்பாக மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் எம்.யாகூப் தலைமையில் பம்மல் பகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆம்புலன்ஸ் தொடங்கப்படவுள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 21ஆவது கால்நடை கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் இன்று (04.11.2024) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்புத் துறை காஞ்சிபுரம் மண்டல இணை இயக்குநர் ப.ஜெயந்தி, துணை இயக்குநர் ஆ.சுந்தரேசன், செங்கல்பட்டு கோட்ட உதவி இயக்குநர் கு.சாந்தி, கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. நாளை முதல் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த திமுக மாணவர் அணி நிர்வாகி டெல்லி பாபு என்கிற விக்கி (19). கல்லூரி மாணவரான இவர், நேற்று மாலை எருமையூரில் இருசக்கர வாகனத்தில் போட்டோ எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, பூந்தமல்லியில் இருந்து வந்த மற்றொரு பைக் மோதி பாபு மீது மோதியது. இதில்,அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், தலைவர் விஜய் தலைமையிலும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையிலும் செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 26 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மேலும், சமீபத்தில் மாநாடு நிகழ்ச்சிக்கு வந்த நிர்வாகிகள் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Sorry, no posts matched your criteria.