India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உடையார்பாளையத்தில் இன்று மாலை தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பு தொடர்பாக தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள வருகை தரும் வெளியூர் நபர்களை ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர்.
உடையார்பாளையத்தில் இன்று மாலை தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பு தொடர்பாக தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள வருகை தரும் வெளியூர் நபர்களை ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர்.
ஆண்டிமடம் வட்டத்தில் 2 ஆம் நாள் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி தலைமையில் நடைபெற்றது. அப்போது நில அளவையர்கள் நிலங்களை அளவீடு செய்ய பயன்படுத்தும் கருவிகளை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, நிலங்களை அளவிடும் முறை, கணக்கிடும் முறை குறித்து நில அளவை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் வகையில் புகார் பெட்டிகள் அமைக்க மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார். மத்திய மாநில அலுவலகங்கள், அரசு/ தனியார் பள்ளிகள் உள்ளிட்ட பத்து பெண்களுக்கும் மேற்பட்டவர்கள் பணி புரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை விசாரிப்பதற்கு புகார் பெட்டி வைக்க மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார்
2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்து பிறந்த குழந்தைக்கும் பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு பதிவு செய்யும் அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
செந்துறை அருகே மணப்பத்தூர் அடுத்த நந்தியன்குடிகாடு இரயில்வேகேட் பகுதியில் இன்று மங்களூர் to சென்னை செல்லும் தொடர் வண்டியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார் இது தொடர்பாக விருத்தாசலம் ரெயில்வே காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடல் கூராய்வுக்கு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மீன்சுருட்டி பகுதியில் வேலை பார்த்து வந்த பொறியாளர் கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீன்சுருட்டி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இவர் பெயர் சுதாகர், ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், வாரியங்காவல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் உணவின் தரம் , ருசி மற்றும் சுகாதாரம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
ஆண்டிமடம் அடுத்த தேவனூர் கிராமத்தில் முந்திரி தோப்பில் நேற்று அடையாளம் தெரியாத நபர் தூக்கிட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் பாப்பாக்குளம் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது கொலையா , தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஜெயங்கொண்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024-25 கீழ் ஜெயங்கொண்டம் தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த கடிதத்தினை வழங்கினார்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குனர் ஆகியோர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.