Ariyalur

News March 2, 2026

அரியலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

அரியலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<> இங்கு க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News March 2, 2026

அரியலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

அரியலூர்: தேர்வு மையத்தினை ஆட்சியர் நேரில் ஆய்வு

image

12ஆம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் 47 மையங்களில், 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் பொதுதேர்வினை, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

News March 2, 2026

அரியலூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

அரியலூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே <<>>க்ளிக் செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News March 2, 2026

அரியலூர்: பரப்புரையில் ஈடுபட்ட திமுகவினர்

image

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில், திமுகவினர் வீடு வீடாக சென்று பரப்புரையில் ஈடுபட்டனர். திமுக அரசின் சாதனைகளையும் செயல் திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வண்ணமாக, வீடு வீடாக சென்று பரப்புரையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News March 2, 2026

அரியலூர்: தூக்கி வீசப்பட்டு காதலர்கள் பலி

image

இடுக்கி மாவட்டம் கேரளாவை சேர்ந்த ஆதித்யா மற்றும் மருங்கலா குறிச்சி காலனி தெருவை சேர்ந்த சங்கர் மகள் சரண்யா இருவரும், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு ஆமணக்கு தோண்டி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.

News March 2, 2026

அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 481 ரேஷன் கடைகளை சேர்ந்த 23,288 குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவர்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இன்று மார்ச் மாதத்தில் 2, 3 ஆகிய தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News March 2, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.01) இரவு 10 முதல் இன்று (மார்ச்.02) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 1, 2026

அரியலூர்: 10th பொதுத்தேர்வு எழுதும் 10,113 மாணவர்கள்

image

அரியலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 62 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 171 பள்ளிகளில் பயிலும் 5290 மாணவர்களும், 4823 மாணவிகளும் என மொத்தம் 10,113 மாணவர்கள் எழுத உள்ளனர். மேலும் தேர்வு மையங்களில் குடிநீர், மின் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News March 1, 2026

அரியலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!