Ariyalur

News February 28, 2026

அரியலூர்: இலவச மருத்துவ பரிசோதனை அறிவிப்பு

image

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்கும் வகையில், மத்திய அரசு மக்கள் மருந்தகத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரியலூர்-பெரம்பலூர் சாலையில் உள்ள மக்கள் மருந்தகம் சார்பில் நாளை (மார்ச் 01) மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 28, 2026

அரியலூர்: புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

image

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரசின் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அரசு ஏற்று விக்கிரமங்கலம் மாரியம்மன் கோயில் அருகேநெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News February 28, 2026

இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்.

image

அரியலூர் மாவட்டத்தில், பிப்.27 இரவு 10 முதல் பிப்.28 காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 27, 2026

அரியலூர்: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

அரியலூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News February 27, 2026

அரியலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே <<>>கிளிக் செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 27, 2026

அரியலூர்: ஒரே அழைப்பில் உங்க பிரச்சனைக்கு தீர்வு!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 27, 2026

அரியலூர்: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை திருச்சி மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9842074680) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News February 27, 2026

அரியலூர் மாவட்ட நீதிமன்றம் அதிரடி!

image

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோழன்மாதேவி கிராமத்தில், இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து ராஜகோபால் என்பவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கினார். மேலும் ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

News February 27, 2026

அரியலூர் மாவட்ட நீதிமன்றம் அதிரடி!

image

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோழன்மாதேவி கிராமத்தில், இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து ராஜகோபால் என்பவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கினார். மேலும் ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

News February 27, 2026

அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 481 ரேஷன் கடைகளை சேர்ந்த 23,288 குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவர்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், வரும் மார்ச் மாதத்தில் 2, 3 ஆகிய தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!