India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 12 ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே இம்முகாமில் கலந்து கொள்ள 18 வயது முதல் 35 வயது வரையிலான 10 ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு, 10-ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை தேர்ச்சி பெற்று, தங்களது கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து புதுப்பித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 967 ஏரி மற்றும் குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே தனிநபர் விவசாய பயன்பாடு, மண்பாண்ட தொழில் மற்றும் தனிநபரின் பொது பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்க விரும்புவோர் அருகிலுள்ள இ-சேவை மையத்தில் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து அனுமதி பெற்று கொள்ளலாம் என கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 10,12 ஆம் வகுப்பு சிறந்த மாணவர்களுக்கு 2022−2023 ஆம் ஆண்டிற்கான காமராஜர் விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார். அதன்படி 15 மாணவ, மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் வீதம் 1,50,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியரக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் ஜூலை 12 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
அரியலூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், சுற்றுலாத்துறை மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை விழா வரும் 2ம் தேதி கொண்டாடுவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவினை சிறப்பாக நடத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நிலக்கடலைக்கு காப்பீடு செய்ய கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவித்துள்ளார். இதன்படி ஆண்டிமடம், குவாகம், அரியலூர், நாகமங்கலம், ஜெயங்கொண்டம், குண்டவெளி, உடையார்பாளையம், பொன்பரப்பி, மாத்தூர், செந்துறை, ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், சுத்தமல்லி மற்றும் தா.பழூர் ஆகிய பகுதிகளில் நிலக்கடலைக்கு பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 09.07.2024, 10.07.2024 ,11.07.2024, 12.07.2024, 15.07.2024 ஆகிய தேதிகளில் அரியலூர் கீழப்பழூர் பொய்யூர் தத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாணவ மாணவியர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு என பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினை தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. வரும் ஜூன் 9ஆம் தேதி அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெறுகிறது. பயிற்சியில் சேர விரும்புபவர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.