India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செந்துறை காலனி தெரு அருகே உள்ள பெரிய ஏரியில் நேற்று 2 மான்கள் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் படி, செந்துறை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இரண்டு மான்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததை உறுதி செய்தனர். பின்னர் இறந்த இரண்டு மான்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்த போலீசார், குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் தாய் தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பதிக்கப்பட்ட 57 குழந்தைகளுக்கு அவர்களின் படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்காக உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். அதில் மாதம் (ரூ.2000/- வீதம் ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை) 12 மாதங்களுக்கு குழந்தைகளின் திட்ட காலத்திற்கு ஏற்ப மொத்த கூடுதல் தொகை ரூ.12,88,000/- வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் தனிநபர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், 2ம் பரிசாக ரூ.75 ஆயிரமும், 3ம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழுபோட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.75 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு தனித்தனியாகவும்,
மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று திமுக கட்சியினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தா.பழூர் ஒன்றிய திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
டெல்லி அண்ணா கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் எம்பி அருண் நேரு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கழக கொள்கை பரப்பு செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காரீப் பருவத்தில் 2023-24ஆம் ஆண்டு சாகுபடி செய்த நெல்மணிகளை கொள்முதல் செய்வதற்காக ஓலையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிவு செய்ய விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல் மற்றும் வங்கிக்கணக்குடன் அருகிலுள்ள நேரடி கொள்முதல் நிலையத்தை அணுகுமாறு அவர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அரசு மகளிர் பள்ளி 12-ஆம் வகுப்பு படித்த பாண்டியன் அம்சவள்ளி இவர்களின் மகள் பரமேஸ்வரி நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளார். பள்ளிக்கு பெருமை சேர்த்த அவர்களை பாராட்டும் விதமாக அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை சுமதி தலைமையில் மாணவி பெற்றோர் பொன்னாடை போற்றி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் பட்டதாரிகள் சுய தொழில் தொடங்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME)வேளாண் உட்கட்டமைப்பு நிதியின்(AIF)கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் தொடங்கலாம் வங்கி கடன் உதவியுடன் கூடிய தொழில்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று வட்டார அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் மூன்று பிரிவில் நடைபெற்ற போட்டியில் செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகள் மாணவிகள் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் விளையாட்டுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளை பாராட்டி சான்றுதல் பரிசுகள் வழங்கினார்கள்
Sorry, no posts matched your criteria.