Ariyalur

News March 27, 2024

தனது தாயிடம் வாழ்த்து பெற்ற விசிக தலைவர்

image

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியின் சார்பில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனுரில் உள்ள தனது தாயிடம் வாழ்த்துப் பெற்றார். இவர் கடந்த முறை சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விசிக நிர்வாகிகள் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

News March 26, 2024

மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவர்

image

அரியலூர் மாவட்டம் தாமரைகுளம் ஊராட்சியில் உள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இன்று (26.3.2024) ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில் தேர்வு எழுதி பெரும் மதிப்பெண்களை பெற்று நமது ஊராட்சிக்கு பெருமை சேர்க்கும் படி அவர்களை வாழ்த்தினார்.

News March 26, 2024

தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

image

நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் சிலால் 4 ரோட்டில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா தொடங்கி வைத்தார். 3 கி.மீ தொலைவில் நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

News March 25, 2024

அரியலூர்: அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

image

சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மா. சந்திரகாசன் இன்று (25.3.2024) அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 25, 2024

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி துவக்கம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற தேர்தலினை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களின் விழிப்புணர்வு பேரணியினை
மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா இ.ஆ.ப., இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 24, 2024

அரியலூர்: மக்களிடம் ஆட்சியர் விழிப்புணர்வு

image

அரியலூர், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஒட்டு வில்லையினை பேருந்து கண்ணாடியில் ஒட்டியும், பேருந்தில் பயணம் செய்யும் பொது மக்களிடம் விழிப்புணர்வு  ஏற்படுத்தினார்.

News March 24, 2024

அரியலூர் அருகே 3 பேர் கைது

image

அரியலூர், ஜெயங்கொண்டம் ஆமணக்கந்தோண்டி கிராமத்தை சேர்ந்த சின்ன பொண்ணு என்பவருக்கும் அதே பகுதியைப் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருடைய குடும்பத்தினருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. கடந்த 22ம் தேதியன்று சுந்தரமூர்த்தியும் அவரது உறவினரும் சின்னபொண்ணை கீழே தள்ளி திட்டியுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிந்து சுந்தரமூர்த்தி அவரது உறவினர் 3 பேரை கைது செய்தனர்.

News March 24, 2024

வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை

image

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

News March 24, 2024

நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, சிதம்பரத்தில் ரா. ஜான்சி ராணிபோட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.