Ariyalur

News April 2, 2024

அரியலூர் அருகே ஒருவர் கைது

image

அரியலூர், கயர்லாபாத் காவல் உதவி ஆய்வாளர் சாமிநாதன் தலைமையிலான, போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கல்வி என்பவர் கள்ளத்தனமாக மது விற்றது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்து, அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

News April 2, 2024

கணினி மூலம் பணி ஒதுக்கீடு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில்  வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் 2 ஆம் கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணி குறித்து  ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் பொதுப்பார்வையாளர் போர் சிங் யாதவ் கலந்து கொண்டார்.

News April 1, 2024

அரியலூர்: வாகனங்களை ஆய்வு செய்ய உத்தரவு

image

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படைகள் மேற்கொள்ளும் தேர்தல் பணிகள் மற்றும் நீலத்தநல்லூர் சோதனைச்சாவடி மையத்தில் மேற்கொள்ளும் கண்காணிப்பு பணிகளையும் தேர்தல் செலவினப் பார்வையாளர் நிதின் சந்த் நெகி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அனைத்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை முறையாக ஆய்வு மேற்கொள்ளுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

News April 1, 2024

அரியலூர்: சட்டவிரோதமாக சிலிண்டர் விற்பனை

image

அரியலூர், ஆண்டிமடம் பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விளந்தை கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் அரசின் மானிய விலை சிலிண்டரில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு பயன்படும் பெரிய சிலிண்டர்களுக்கு சமையல் எரிவாயுவை நிரப்பி அப்பகுதியிலுள்ள கடைகள், மண்டபங்களுக்கு விற்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர்.

News April 1, 2024

அரியலூர் அருகே 2 பேர் கைது: போலீசார் அதிரடி

image

அரியலூர் காசாங்கோட்டையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக தா.பழுர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றிச் சென்ற பச்சமுத்து, கருணாநிதி ஆகிய இருவரை கைது செய்து இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 1, 2024

அரியலூர் அருகே தொழிலாளியை தாக்கியவர் கைது

image

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் தெற்கு தெருவை சேர்ந்த தேவராஜ் மகன் ரவி, சிவக்குமார் மகன் வல்லரசு. இவர்களிடையே முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற ரவியை, வல்லரசு தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரவி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 31, 2024

அரியலூர் அருகே தகராறு

image

விக்கிரமங்கலம் அருகே  சாத்தம்பாடி ஊராட்சி கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சரவணன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டர் மனோகரன் ,தூய்மை காவலர் அன்புமணி ஆகியோர் குஞ்சு வெளி கிராமத்திற்கு வீட்டு வரி வசூல் செய்வதற்கு சென்றுள்ளனர்.அப்பொழுது குஞ்சு வெளி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் என்பவர் அவர்களை திட்டியாதகவும் இது குறித்து ஊராட்சி செயலர் அளித்த புகாரில் முருகானந்தம் கைது செய்யப்பட்டார்.

News March 31, 2024

ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்களவை தேர்தல் தொடர்பாக வேட்பாளர்கள், முகவர், அரசியல் கட்சியினருடனான தேர்தல் நன்னடத்தை விதி மற்றும் செலவினங்கள் தொடர்பான விளக்கக் கூட்டம் தேர்தல் அலுவலர்ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இதில், தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ் முன்னிலை வகித்தார்.

News March 31, 2024

தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர்களிடையே 100 % வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம்” என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News March 31, 2024

அரியலூரில் தேர்வில் மாற்றம்

image

6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல்.10 அன்று நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22.4.2024 அன்றும், 12.4.2024 அன்று நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 23.4.2024 அன்றும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இதனால் கோடை விடுமுறை தள்ளிப்போவதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.