Ariyalur

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 5, 2024

தபால் வாக்குகளை பெறுவதற்கு 40 குழுக்கள்

image

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தபால் மூலம் ஓட்டுப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்த மாற்றுத்திறனாளிகள் 1559 பேரும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 1816 பேரும் பொது தேர்தலில் தபால் வாக்கு அளிக்க விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த வாக்காளர்களின் வீடுகளுக்கு வரும் 5, 6 மற்றும் 8 ஆகிய நாட்களில் சென்று தபால் ஓட்டுகளை பெறுவதற்கு 40
குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

News April 4, 2024

தபால் வாக்குகளை பெறுவதற்கு 40 குழுக்கள்

image

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தபால் மூலம் ஓட்டுப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்த மாற்றுத்திறனாளிகள் 1559 பேரும் 85+ வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 1816 பேரும் பொது தேர்தலில் தபால் வாக்கு அளிக்க விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த வாக்காளர்களின் வீடுகளுக்கு வரும் 5, 6 மற்றும் 8 ஆகிய நாட்களில் சென்று தபால் ஓட்டுகளை பெறுவதற்கு 40
குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

News April 4, 2024

அரியலூர்: சிறுமி கர்ப்பம்: கைது

image

அரியலூர், ஜெயங்கொண்டம் அருகே கொக்கரணை கிராமத்தை சேர்ந்த ராஜு. இவர்,  17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்து திருமணம் செய்து செய்துள்ளார். தற்போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கர்ப்பத்தை கலைத்து விட்டு தலைமறைவானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த ராஜுவை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்தனர். 

News April 4, 2024

பாலியல் தொல்லை- வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும் எனவும், ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

அரியலூர்: திருமாவளவன் வாக்கு சேகரிப்பு

image

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் குன்னம் சட்டமன்ற தொகுதி, ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம், காரை ஊராட்சியில், புதுக்குறிச்சி, மலையப்ப நகர், சமத்துவபுரம், காரை, ஆகிய கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து நேற்று (3.4.2024) பானை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

News April 3, 2024

அரியலூர்: சிறப்பு செலவின பார்வையாளர் நியமனம்

image

சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு சிறப்பு செலவினப் பார்வையாளராக பி.ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான புகார் மற்றும் தகவலுக்கு அவரது கைப்பேசி 9345298218 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

அரியலூர் அருகே சரமாரி தாக்குதல்

image

அரியலூர், சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வல்லரசு என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ரவி தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற போது, வல்லரசு அவரை வழிமறித்து சாவியால் மூக்கில் குத்தியுள்ளார். இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிந்து போலீசார் நேற்று வல்லரசை கைது செய்தனர்.

News April 3, 2024

அரியலூர்: பூத் ஸ்லிப் வழங்கிய ஆட்சியர்

image

சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டுகளை வழங்கினார்.

News April 2, 2024

அரியலூர்: குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய திருமாவளவன்

image

விசிக தலைவர் திருமாவளவன் அரியலூர் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது திருமாவளவனிடம் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பெயர் சூட்டுமாறு தெரிவித்தனர். குழந்தைகளை அன்போடு வாங்கிய திருமாவளவன் குழந்தைகளுக்கு அம்பேத்வளவன் , எழில் செல்வன் என பெயரிட்டு மகிழ்ந்தார்.