India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்து வைத்தாலோ, உதவி புரிந்தாலோ கடும் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று ஆட்சியர் ரத்தினசாமி எச்சிக்கை விடுத்துள்ளார். மேலும் குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால், 24 மணி நேரமும் செயல்படும் குழந்தை பாதுகாப்பு உதவி மையத்தை 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். ஷேர் செய்யவும்
முழு மானி யத்தில் வழங்கப்படும் பூச்சி விரட்டிகளை வாங்கி வயல் வரப்புகளில் பயிடலாம் என வட்டார வேளாண் உதவி இயக்குநர் சாந்தி தெரிவித்துள்ளார்.நொச்சி மற்றும் ஆடாதொடா போன்ற பூச் சிவிரட்டிகளை மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தின் முழு மானிய விலையில் அரியலூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் 15,000 எண்கள் விநி யோகம் செய்யப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அலுவலர் சந்திக்கலாம்
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்து இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தல்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை சர்வாணிகா, பிரான்ஸ் – போர்ச்சுகல் நாடுகளில் நடைபெற்ற International Chess Championship போட்டியில் இம்மாதம் 10ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பங்கேற்றார். அவரின் விமானப்பயணம், தங்குமிடம், உள்ளிட்ட செலவினங்களை தமிழ்நாடு அரசே ஏற்கும் வகையில், சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து ரூ.5.29 லட்சத்துக்கான காசோலையை அவரது தந்தையாரிடம் துணை முதல்வர் வழங்கினார்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பு மற்றும் ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற்றிட மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு, சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி அறிவித்தார்.
குழுமூர் கிராமத்தில் உள்ள புத்தர் சிலையை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில ஆண்டுக்கு முன்பு சமூக விரோத கும்பலால் சிலையின் தலைப்பகுதி வெட்டி கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் எழுந்துள்ளது.
டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் தொடர்பு கொண்டு பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களின் உண்மையை அறியாமல் நம்பி ஏமாறாதீர்கள் என அரியலூர் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் முதலில் சிறிய டாஸ்க்கை அனுப்பி அதை செய்தவர்களுக்கு சிறிய தொகை அனுப்புவர். பிறகு பெரிய டாஸ்கை செய்ய முதலீடு செய்ய வேண்டும் என்று மோசடி செய்வர். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் இன்று (22.10.2024) ஆண்டிமடம், அய்யூர், பெரியகருக்கை, பாப்பாக்குடி ஆகிய நான்கு துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் கிராமங்களுக்கு மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 09.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஷேர் செய்யவும்
தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசு மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த கோரியும் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ஒட்டி சுற்றியுள்ள கிராமங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரியும் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மூலம் மண்டல, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
தா.பழூர் அருகே சோழன்மாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் எண்ணெய் பனை திட்டத்தின் கீழ், எண்ணெய் பனை மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் எம்எல்ஏ கண்ணன் கலந்து கொண்டு சோழன்மாதேவி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நிலத்தில், எண்ணெய் பனை மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.
இதில் வேளாண் துறை மற்றும் கிரீடு வேளாண் அறிவியல் மைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Sorry, no posts matched your criteria.