India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா தலைமையில் மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் மதிமுக மாவட்ட செயலாளர் க. ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் பெ தங்கவேல், நகர கழக செயலாளர் இராம மனோகரன் ,ஒன்றிய கழக செயலாளர் காட்டுப்பிரிங்கியம் பி. சங்கர் மற்றும் குமார் இரா.சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே உள்ள சமத்துவபுரம் சாய்பாபா ஆலயத்தின் இரட்டை சிறுத்தை இருப்பதாக வாட்சப்பில் உலா வரும் செய்தி தவறானது. யாரோ வேண்டுமென்று வாட்ஸ் அப்பில் பொய் செய்திகளை பரப்பி பொது மக்களை அச்சுறுத்துவதாக வனத்துறை சார்பில் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரியுள்ளனர்.
அதிமுக சார்பில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரகாசனுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அரியலூர் மாநகரில் பொதுமக்களிடம் இரட்டைஇலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். மேலும் அவர் பேசியதாவது, அதிமுகவை யாரும் மிரட்டிப் பார்க்க முடியாது. எந்த பூச்சாண்டிக்கும், அதிமுக அஞ்சாது என்றும் தெரிவித்தார். உடன் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு, செந்துறை நகரத்தை சேர்ந்த வாக்காளா் பெருமக்களை சந்தித்து பானை சின்னத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் இன்று (13.4.2024) வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணிக் கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள், அனைத்துக் கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர்,செந்துறை பகுதியில் வனத்துறையினரிடம் சிக்காமல் சிறுத்தை ஒன்று சுற்றி வருகிறது. நின்னியூர் கிராமத்தில் நேற்று சிறுத்தையின் கால்தடம் கண்டறியப்பட்டது.இதனால் அப்பகுதியில் அமைத்த 3 கூண்டுகளிலும் சிறுத்தை சிக்கவில்லை.கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.“சிறுத்தை தன் இடத்தை தேடி இடம்பெயர்ந்து வருகிறது”என அரியலூர் மாவட்ட வனத்துறை அலுவலர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர். சிறுத்தையை கண்டுபிடிக்க செந்துறை, பொன்பரப்பி, சிதளவாடி, உஞ்சினி, முந்திரி காடு ஆகிய 22 இடங்களில் கேமரா பொருத்தும் பணி தொடங்கியது. சிறுத்தையை பிடிக்க மயிலாடுதுறையில் இருந்து கூண்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரியலூரில் இன்று அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்குச் சென்ற அனைத்து மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க 63852 85485 என்ற வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.
அரியலூர் செந்துறையில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில் கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகள் வைத்திருப்போர் அதனை பாதுகாப்பாக வைத்து கொள்ளவும்,பொதுமக்களின் பாதுக்காப்பை உறுதிபடுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஆட்சியர் அனிமேரி அறிவித்துள்ளார். சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க 63852 85485 என்ற வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.
அரியலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில்10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர். செந்துறை அரசு மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இரும்பு வேலியை சிறுத்தை தாவும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்களும் சிறுத்தையை நேரில் பார்த்துள்ளனர். காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.