India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் இருந்து அரியலூர் கலெக்டர் அலுவலகம் வரை 12 வேகத்தடைகள் உள்ளது. இந்த வேகத்தடைகள் பெயரளவிற்கு மட்டுமே போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் லாரிகளால் அடிக்கடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ,வேகத்தடைகளை ஆய்வு செய்து முறையான வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி முத்துவாஞ்சேரியை சேர்ந்த சுப்பிரமணியன் (50) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.அப்பொழுது வீட்டில் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் அருகே செட்டி திருக்கோணம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி; தனது மனைவி செல்வம்பாளுடன் பைக்கில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். கடுங்காலி கொட்டாய் அருகே சென்றபோது, பின்னால் நெய்வேலியை சேர்ந்த இசக்கிமுத்து ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியதில் படுகாயம் அடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்ட ஆட்சியரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்னா தனது வாக்கினை அரியலூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளில் சாய்தளம், சக்கர நாற்காலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை மாற்றத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்படுத்திக்கொண்டு அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும் சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.
அரியலூர் அருகே ராஜீவ்நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிக்கவும் அறிவுறுத்தினர். மேலும் தேர்தல் திருவிழா, தேசத்தின் பெருவிழா செல்பி கார்னரில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் வேட்பாளர் ஜான்சிராணி உள்ளிட்ட 14 பேர் களம் காணுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், இறுதி கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்த வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று(17.04.2024) அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் ஆனந்தவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தலை ஒட்டி, அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக செந்துறை ஒன்றியம் சிறுகளத்தூர் முதல் பொன்பரப்பி வரையில் இன்று(ஏப்.17) காவல்துறை கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Sorry, no posts matched your criteria.