India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அரியலூரில் 6 மில்லிமீட்டர், திருமானூரில் 8 மில்லி மீட்டர், ஜெயங்கொண்டத்தில் 13 மில்லிமீட்டர், ஆண்டிமடத்தில் 6 மில்லி லிட்டர், சித்த மல்லி நீர்த்தேக்கத்தில் 5.2 மில்லிமீட்டர், செந்துறையில் 2.4 மில்லி மீட்டர், மாவட்டத்தில் மொத்தம் 40.6 மிமீ மழை கடந்த நான்கு மணி நேரத்தில் பெய்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் கோடை மழை துவங்கியுள்ளதால், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாதுகாப்பற்ற அபாயகரமான நீர்நிலைகளின் கரையோரங்களில் நின்றுகொண்டு பொதுமக்கள் செல்பி எடுப்பதை தவிர்த்திட வேண்டும். குழந்தைகள், மாணவர்களை பெற்றோர்கள் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
புதுப்பாளையம் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் தாய் உள்ளிட்ட 3 குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள், பொதுமக்கள் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை ஆண்டிமடம், உடையார்பாளையம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,செந்துறை பகுதியில் 5 சென்டி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. சமீபமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெயங்கொண்டம் அரசு கலை கல்லூரியில் நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 20 வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரியின் முதல்வர் ரமேஷ் தெரிவித்துள்ளார். 2024-25 ஆம் கல்வி சேர விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவு கட்டணம் ரூ.2. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என தகவல்.
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மற்றும் உடையார்பாளையம் அரசு மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியர் நேற்று(மே 14) ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தார். கோடை வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்க வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கைகள், உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் குறித்து ஆய்வு செய்தார்.
குழந்தை திருமணச் சட்டம் 2006 இல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். 18 வயதுக்குட்பட்ட குழந்தையை 18 வயதிற்கு மேற்பட்டவர் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் குற்றவாளி ஆவார். குழந்தை திருமணம் நடந்தால் அதை ஏற்பாடு செய்தவர்கள், கலந்து கொண்ட அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுவர். எனவே குழந்தை திருமணம் நடைபெற்றால் அதனை உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தெரிவிக்கவும்.
சுண்டக்குடியை சேர்ந்த விக்னேஷ்குமார் கடந்த 2021 இல் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விக்னேஷ் குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.