Ariyalur

News October 22, 2024

அரியலூரில் உதவித்தொகை பெற கலெக்டர் அழைப்பு

image

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்து இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தல்.

News October 22, 2024

போட்டிக்கான செலவுகளை ஏற்றுக்கொண்ட  அறக்கட்டளை

image

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை சர்வாணிகா, பிரான்ஸ் – போர்ச்சுகல் நாடுகளில் நடைபெற்ற International Chess Championship போட்டியில் இம்மாதம் 10ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பங்கேற்றார். அவரின் விமானப்பயணம், தங்குமிடம், உள்ளிட்ட செலவினங்களை தமிழ்நாடு அரசே ஏற்கும் வகையில், சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து ரூ.5.29 லட்சத்துக்கான காசோலையை அவரது தந்தையாரிடம் துணை முதல்வர் வழங்கினார்.

News October 22, 2024

அரியலூர் கலெக்டர் அழைப்பு

image

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பு மற்றும் ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற்றிட மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு, சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி அறிவித்தார்.

News October 22, 2024

குழுமூர் புத்தர் சிலை பாதுகாக்கப்படுமா?

image

குழுமூர் கிராமத்தில் உள்ள புத்தர் சிலையை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில ஆண்டுக்கு முன்பு சமூக விரோத கும்பலால் சிலையின் தலைப்பகுதி வெட்டி கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் எழுந்துள்ளது. 

News October 22, 2024

அரியலூர் போலீசார் எச்சரிக்கை

image

டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் தொடர்பு கொண்டு பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களின் உண்மையை அறியாமல் நம்பி ஏமாறாதீர்கள் என அரியலூர் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் முதலில் சிறிய டாஸ்க்கை அனுப்பி அதை செய்தவர்களுக்கு சிறிய தொகை அனுப்புவர். பிறகு பெரிய டாஸ்கை செய்ய முதலீடு செய்ய வேண்டும் என்று மோசடி செய்வர். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 22, 2024

அரியலூரில் இன்று மின்தடை

image

அரியலூர் மாவட்டத்தில் இன்று (22.10.2024) ஆண்டிமடம், அய்யூர், பெரியகருக்கை, பாப்பாக்குடி ஆகிய நான்கு துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் கிராமங்களுக்கு மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 09.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஷேர் செய்யவும்

News October 21, 2024

அரியலூரில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரி மனு

image

தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசு மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த கோரியும் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ஒட்டி சுற்றியுள்ள கிராமங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரியும் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மூலம் மண்டல, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

News October 21, 2024

அரியலூர்: பனை நடவு செய்யும் பணி

image

தா.பழூர் அருகே சோழன்மாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் எண்ணெய் பனை திட்டத்தின் கீழ், எண்ணெய் பனை மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் எம்எல்ஏ கண்ணன் கலந்து கொண்டு சோழன்மாதேவி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நிலத்தில், எண்ணெய் பனை மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.
இதில் வேளாண் துறை மற்றும் கிரீடு வேளாண் அறிவியல் மைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்

News October 21, 2024

உதயநிதி ஸ்டாலின் வருகை ஒத்திவைப்பு

image

அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாளை (அக்.22) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் துணை முதலமைச்சரின் வருகை தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2024

அரியலூரில் 2,727 பேர் பதிவு

image

தமிழக முழுவதும் நேற்று திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 2,640 மாணவர்கள் எழுதினர். இத்தேர்வானது அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, விளந்தை மற்றும் திருமானூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. அரியலூரில் மட்டும் 11 மையங்கள் அமைத்து நடத்தப்பட்டு, தேர்வு எழுத 2,727 பேர் பதிவு செய்தனர்.

error: Content is protected !!