Ariyalur

News December 28, 2024

அரியலூர்- போட்டி தேர்விற்கான இலவச பயிற்சி

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 31.12.2024 அன்று காலை 10.00 மணியளவில் துவங்கப்பட உள்ளது. இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் அதிக அளவிலான மாணவ / மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News December 27, 2024

அரியலூர் காவல் கண்காணிப்பாளர் அறிவுரை

image

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் அறிவுரை செய்தி வழங்கியுள்ளார். அதில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக ஏரி, குளங்கள் முழு கொள்ளளவில் நிரம்பியுள்ளன. தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டில் உள்ள தங்களது குழந்தைகளை ஆறு, ஏரி, குளங்களுக்கு ஆகியவற்றுக்கு செல்லாதவாறு பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News December 27, 2024

அரியலூர்: அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

image

அரியலூர் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், போதையில் அரசுப் பேருந்து கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தவர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி ஜாகீர் உசேன்(27) மதுப் போதையில் இருந்து அங்கு நின்று கொண்டிருந்த விருத்தாசலம் அரசுப் பேருந்து கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து சேதப்படுத்தினார். மேலும் அவரிடம் இருந்து 50‌ கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

News December 27, 2024

அரியலூர்: ரூ.1.12 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணி

image

உடையார்பாளையத்தில் சுமார் ரூ.1.12 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன. உடையார்பாளையம் உட்பட்ட வார்டு 14-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் கண்ணன், அங்கு தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.18 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட நியாய விலைக் கடையை திறந்து வைத்தார்.

News December 26, 2024

பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – ஆட்சியர்

image

அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் இல்லங்களை அலுவலர்கள் முறையாக ஆய்வு செய்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் பொ. ரத்தினசாமி அறிவுறுத்தினார். ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அனைத்து குழந்தைகள் இல்லங்களிலும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு மற்றும் பல்துறை பணிக்குழு ஆகியவை குழந்தைகள் இல்லத்தில் ஆய்வு செய்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.

News December 26, 2024

சி. நாராயணசாமி நாயுடு விருது பெற ஆட்சியர் அழைப்பு

image

அரியலூர் நெல் சாகுபடியில், திருந்திய நெல் சாகுபடி தொழில் தொழில்நுட்பத்தை மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது மற்றும் ரூ. 5 லட்சம், ரூ.3,500 மதிப்புடைய வெள்ளிப் பதக்கம் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 25, 2024

அரியலூரில் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த புதைப்படிவம்

image

அரியலூர் பகுதியில், காரக்பூர் இந்திய தொழில்நுட்ப கழக புவியியல் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டெடுத்த புதைப்படிவங்களை ஆட்சியர் பொ. ரத்தினசாமியிடம்  வழங்கினர். இந்த கண்டறிந்த புதைப்படிவங்களை அருங்காட்சியகத்துக்கு பார்வையிட வரும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக 10-க்கும் மேற்பட்ட புதைப்படிவங்களை ஆட்சியரிடம் வழங்கினர்.

News December 25, 2024

அரியலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

சிறிய முதலீடுகளின் மூலம் அதிக வருமானத்தை ஈட்டலாம் என்று கூறும் எந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தையும் நம்ப வேண்டாம். இயல்பை விட அதிகமான வருமானத்தை தருவதாக உறுதியளிக்கும் தவறான மற்றும் ஏமாற்றும் முதலீட்டு வாய்ப்புகளை நம்பாதீர்கள். குறுஞ்செய்தி, சமூக வலைதளம், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் வரும் கவர்ச்சிகரமான விளம்பரம் ஆகியவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்று அரியலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News December 24, 2024

தூத்தூர் பகுதியில் முதலை நடமாட்டம்

image

அரியலூர் மாவட்டம், தூத்தூர் அருகே கீழராமநல்லூர் கிராமத்தில் உள்ள  அரியதங்கம் கோவில் அருகே மணல்திட்டு பகுதியில் நேற்று (டிச.23) மாலை 5.30 மணியிலிருந்து ராட்சத முதலை ஒன்று உலாவி வருவதை அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு மக்கள் தகவல் அளிக்கவே தீயணைப்பு வீரர்கள் முதலையை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

News December 23, 2024

அரியலூரில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம்

image

அரியலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதுபோல் இன்று 23/12/2024 மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் தங்கள் சொந்த பிரச்சினை மற்றும் பொது சார்ந்த பிரச்சினைகளை மனு மூலம் அலுவலர்களுக்கு தெரிவிக்கலாம். இந்த குறைதீர் கூட்டமானது ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

error: Content is protected !!