Ariyalur

News January 6, 2025

241 கோரிக்கை மனுக்களை பெற்ற அரியலூர் கலெக்டர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெறும். அதன்படி இன்று (ஜன.06) மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுதிறனாளி உதவிதொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 241 மனுக்கள் பெறப்பட்டன.

News January 6, 2025

அரியலூர்: 36 பஞ்சாயத்துகளை நிர்வகிக்க அலுவலர்

image

அரியலூர் ஒன்றியத்தில் மணக்குடி கள்ளங்குறிச்சி தாமரைக் குளம் ஓட்டக்கோவில் உள்ளிட்ட 36 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இந்நிலையில் உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை ஒட்டி 36 பஞ்சாயத்துகளை நிர்வகிக்க அரியலூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள நாராயணன் நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலரை அணுகலாம்.

News January 6, 2025

அரியலூர்: மாடுபிடி வீரர்களுக்கு அழைப்பு

image

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (ஜன.06) தொடங்கியது இதில் கலந்து கொள்ள விரும்பும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் madurai.nic.in என்ற இணையதளம் மூலம் ஜன.7 மாலை 5 மணிக்குள்ளாக பதிவுசெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 6, 2025

அரியலூர்: விமான நிலையங்களில் பணிபுரிய பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பிளஸ்2 அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சர்வதேச விமான நிலையங்களில் பணிபுரிய, சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பயிற்சி வழங்கப்படவுள்ளது, இதற்கு தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை ஷேர் பண்ணுங்க.

News January 6, 2025

ஏரியில் பிணமாக கிடந்த 80 வயது மூதாட்டி

image

அரியலூர், வானத்திரையான்பட்டிணத்தை சேர்ந்த தனம் என்ற 80 வயது மூதாட்டி உடையார்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று (ஜன.05) உடையார்பாளையம் பெரிய ஏரியில் மூதாட்டி தனம் பிணமாக கிடந்தார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உடையார்பாளையம் போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 6, 2025

ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் வெளியூர் பயணம்

image

ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் நாளை முதல் 10-01-2025 வரை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்றுள்ளார். ஏதேனும் அவசர அழைப்புக்கு சட்டமன்ற உறுப்பினரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், அவரது உதவியாளர் எண்ணை 90474 50699 தொடர்பு கொள்ளுமாறு எம்எல்ஏ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2025

அரியலூரில் மளமளவென குறைந்த மக்கள்தொகை

image

தமிழ்நாடு புவியியல் துறை 2022ஆம் ஆண்டு நிலவரப்படி மக்கள்தொகை குறைவாக உள்ள மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்ட மக்கள்தொகை 8 லட்சமாக குறைந்து, 4 ஆம் இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது . விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள அரியலூர் மக்கள், பெரும் நகரத்தை நோக்கி படையெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. SHAREIT

News January 5, 2025

அரியலூர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவு

image

அரியலூர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர், தா.பழூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து 201 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் இன்றுடன் (ஜன.05) நிறைவடைகிறது.

News January 5, 2025

அரியலூர்: கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி

image

அரியலூரில் பொது நூலகத்துறை மற்றும் மாவட்ட நூலக ஆணை குழு சார்பில் இளைஞர் இலக்கிய திருவிழா நடைபெறுகிறது. அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ஜன.6 (நாளை) முதல் ஜன.8ஆம் தேதி வரை கல்லூரி மாணவ மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.3000 முதல் ரூ.5000 வரை பரிசு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 4, 2025

அரியலூர்: மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த எம்.எல்.ஏ.

image

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியை, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அதே போல் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சின்னப்பா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோரை சந்தித்தும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் தெரிவித்தார்.

error: Content is protected !!