Ariyalur

News January 13, 2025

அரியலூர்: உச்சத்தை தொட்ட மல்லி பூவின் விலை

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது.  அரியலூரில் கடந்த மாதம் ரூ.1,000-க்கு விற்பனையான  மல்லிகை பூ கிலோ ரூ.2500-க்கும், செவ்வந்திப்பூ கடந்தவாரம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 300-க்கு விற்கப்பட்ட காக்கரட்டான்
ரூ.1,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News January 13, 2025

பொது நிவாரண நிதிக்கான காசோலை வழங்கிய கலெக்டர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அஸ்தினாபுரம் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை உயிரிழந்தவரின் மனைவியிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி இன்று வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பரிமளம் உடன் இருந்தார்.

News January 13, 2025

அரியலூர்: ஊக்க பரிசு சான்றிதழ் பெற அழைப்பு

image

உடையார்பாளையம் A.V.K. மகாலில் திருவள்ளுவர் தினத்தன்று மாணவர்களுக்குத் திருக்குறளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், திருக்குறள் முற்றோதல் நிகழ்வு தத்தனூரில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் நடைபெறுகிறது. இதில் 133மாணவர்கள் 133அதிகாரங்கள் குறித்து பேச இருக்கிறார்கள். மாவட்டத்தில் உள்ள ஆர்வமுடைய மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 13, 2025

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாலையில் வேகத்தடை

image

அரியலூரில் செந்துறை சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவக்கல்லூரி நுழைவு வாயிலின் தென்பகுதியில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏராளமான மக்கள் சிகிச்சை பெற மருத்துவமனை வருகின்றனர். இச்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளது .  

News January 13, 2025

அரியலூர்: போகி பண்டிகை கொண்டாட்டம்

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் பொங்கலின் முதல் நாளான இன்று போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். போகி என்றால் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு பழைய பொருட்களை எரித்து, அருகில் இருக்கும் வீட்டாருக்கு போகியின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குழந்தைகள் அதனை கண்டு மகிழ்ந்தனர்.

News January 12, 2025

அரியலூர் பேருந்து நிலையங்களில் கூட்டம்

image

பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஜன.14) கொண்டாடப்படவுள்ளதை அடுத்து தொடர் விடுமுறையால் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், பொருட்கள் வாங்க வந்தவர்கள் என ஏராளமானவர்கள் பஸ்களில் பயணித்தனர். இதனால் நேற்று (ஜன.11) அரியலூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதினர்.

News January 12, 2025

அரியலூரில் கரும்பு விற்பனை மும்முரம்

image

அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு கரும்பு விற்பனை வெகு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 1 கட்டு கரும்பு ரூ.450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த அளவில் மட்டுமே இந்த ஆண்டு அறுவடை செய்யப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதனால் கரும்பு விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

News January 12, 2025

அரியலூர்: இந்திய விமானப்படையில் பணி வாய்ப்பு

image

இந்திய விமானப்படையில் வரும் 29-ஆம் தேதி மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கும், பிப்.4-ஆம் தேதி மருந்தாளுனர் பணியிடத்திற்கும் ஆள்தேர்வு நடக்கிறது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 7464850500 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது co.8asc-tn@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News January 11, 2025

செந்துறை: நியாய விலை கடையில் ஆட்சியர் ஆய்வு

image

செந்துறை நியாய விலை கடையினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொருட்களின் கையிருப்பு குறித்த விவரம், பொதுமக்களுக்கு பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தனர். இதில் அரசு துறை அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

News January 10, 2025

அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் 

image

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் திருவள்ளுவர் தினம் (15.01.2025) மற்றும் குடியரசுதினம் (ஜன-26) ஆகிய தினங்களில் மட்டும் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!