India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருமானூர் ஒன்றியத்தில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தேசிய மாற்றத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை கிடைக்கப்பெறாத மாற்றுத் திறனாளிகள், இந்த சிறப்பு முகாமில் மனு அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி அறிவித்துள்ளார். இடம்: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திருமானூர்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் செல்வராஜ் இவர் தனது குடும்பத்தினருடன் அரியலூர் மாவட்டம் கடம்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்வதற்கு காரில் சென்றபோது ஏலாக்குறிச்சி ஆர்ச் அருகே கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரை ஓட்டிய செல்வராஜ் மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 4 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சிறிய அளவிலான தனியார் துறை வாய்ப்பு முகாம் நெல்லியாண்டவர் கல்லூரியில் நவ 29 ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யயுள்ளனர். எனவே 10 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (நவ.27) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தை தொடர்ந்து அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
செந்துறை வட்டத்திற்குட்பட்ட இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை காலை 11 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அளிக்கும் மனுக்களை பெற உள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கபட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கபட உள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் காரணமாக, அரியலூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்திற்கு “ஆரஞ்சு அலர்ட்” எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட் செய்யவும்
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், நாளை அரியலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், பாப்பாக்குடி, ஓலையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (நவ.26) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஆண்டிமடம், மருக்காளங்குறிச்சி, வடுகர்பாளையம், கவரப்பாளையம், பாப்பாக்குடி, மீன்சுருட்டி, அழகர் கோயில், ஓலையூர், விழுதுடையான் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என ஆண்டிமடம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டம் ஒன்றியம், தேவாமங்கலம் ஊராட்சியில், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் சிறப்பு முகாமினை இன்று (24.11.2024) போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,
செந்துறை காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலராக பணி புரிபவர் செல்வமோகன். இவர் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிர் இழந்துள்ளார். இதையடுத்து போலீசார், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sorry, no posts matched your criteria.