Ariyalur

News December 13, 2024

சுவர் இடிந்து முதியவர் உயிரிழப்பு

image

அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் வேங்கையன் ( 75) என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்துள்ளனர். மேலும் இது குறித்து அரியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 13, 2024

அரியலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (டிச.13) பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையை தொடர்ந்து அரியலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News December 12, 2024

அரியலூர் அருகே விபத்து – ஒருவர் பலி

image

அரியலூர் அருகே மேல மாத்தூர் கிராமத்திற்கு ஐந்து பெண்கள் ஆட்டோவில் சென்றுள்ளனர் ஆட்டோ வளைவில் திரும்பும் போது எதிரே வந்த கனரக வாகனம் மோதியதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் காயமடைந்த நான்கு பேரும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் இது குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

News December 12, 2024

குண்டவெளி: கல்லூரி மாணவர் பேருந்தில் சிக்கி உயிரிழப்பு

image

அரியலூர் மாவட்டம் குந்தவெளி அடுத்த வங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி முடிந்து இரு சக்கர வாகனத்தில் சொந்த ஊரான பாப்பாக்குடி கிராமத்திற்கு சென்றபோது, தனியார் பேருந்தை முந்துவதற்கு முயற்சித்த நிலையில் தடுமாறி பேருந்தின் சக்கரத்தில் இருசக்கர வாகனம் சிக்கியதில் சக்தி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீன்சுருட்டி போலீசார் விசாரணை.

News December 12, 2024

பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

image

அரியலூர் மாவட்டத்தை சுற்றி உள்ள பகுதிகளான செந்துறை, உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், திருமானூர் போன்ற இடங்களில் நேற்று இரவு முதல் தற்போது வரை பெய்து வரும் கனமழையால் இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் மழையில் நனையாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

News December 12, 2024

அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

image

அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக இன்று (டிச.12) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டையை தொடர்ந்து அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்

News December 11, 2024

வடகிழக்கு பருவமழை பணிகள் குறித்து ஆய்வு

image

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 2024 தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் திருமதி.மு.விஜயலெட்சுமி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பொ.இரத்தினசாமி முன்னிலையில் இன்று (11.12.2024) நடைபெற்றது.

News December 11, 2024

அரியலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் வட்டத்திற்குட்பட்ட கோவிந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 11 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அளிக்கும் மனுக்களை பெற உள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கபட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 10, 2024

அரியலூர்- திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு.

image

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்படும் காவல்துறை சிறப்பு பிரிவான சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்தார். பல்வேறு வழிகாட்டுதல்களையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார். ஆய்வின் போது மாவட்ட எஸ்பி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தார்.

News December 10, 2024

மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

image

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில், காவல்துறையினர் மனித உரிமைகள் தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் கென்னடி, காவல் ஆய்வாளர்கள் செல்வகுமாரி(தனிப்பிரிவு) கவிதா(இணைய குற்றப்பிரிவு) காவல் துறை அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!