Ariyalur

News January 9, 2025

ஆண்டிமடம்: ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு

image

ஆண்டிமடம் பகுதிகளில் இன்று (09/01/25) பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. ஜனவரி 3ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று அரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, கரும்பு 1 வழங்கப்பட்டு வருகிறது. சிலம்பூர்,அழகாபுரம், பட்டினம் குறிச்சி, வரதராஜன் பேட்டை, விளந்தை, ஆண்டிமடம் ,அகரம் ஆகிய பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

News January 9, 2025

தமிழின் சிறப்பை கொண்டு சேர்ப்பது அனைவரின் கடமை

image

தமிழ்மொழியின் சிறப்பை வருங்கால தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது அனைவரின் கடமை என்றார் அரியலூர் ஆட்சியர் பொ.ரத்தினசாமி.தாய்மொழி அக்கறை கொண்ட இனம் முன்னேற்றமடையும். அந்த வகையில் தொன்மையான மற்றும் பன்னெடுங்காலமாக உள்ள தமிழ் மொழியை மேலும் எடுத்துச் செல்ல வேண்டும். அலுவலகத்தில் தூய தமிழ் மொழியை உபயோகிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

News January 8, 2025

அரியலூர்: இளைஞர் இலக்கிய திருவிழா

image

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட மைய நூலகம் சார்பில் இளைஞர் இலக்கிய திருவிழா 3வது நாள் நிறைவு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மைய நூலக அலுவலர் வேல்முருகன் சிறப்புரையாற்றினார். உடனடி ஹைக்கூ, நூல் அறிமுகம், புத்தக அறிமுக உரை, ஆங்கிலம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

News January 8, 2025

அரியலூர்: ஆட்சி மொழி பயிலரங்கு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் இன்று (ஜன.08) நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், அலுவலகக் குறிப்புகள் வரைவுகள், செயல்முறை ஆணைகள் குறித்த தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

News January 8, 2025

அரியலூர்: பொங்கல் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு

image

பொங்கல் பண்டிகை ஒட்டி தமிழ்நாடு அரசின் விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்துக் கொள்ளும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் tnstc official app (ம) www.tnstc.in இணைய தளங்கள் மூலமாக முன்பதிவு செய்யலாம் என்றும் ஜன.10 முதல் 13ம் தேதி வரை காலை 7 மணி முதல் இரவு 9 மணி கோயம்பேடு (ம) கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

News January 8, 2025

அரியலூர்: பொங்கல் கலைப் போட்டிகள்

image

பொங்கல் பண்டிகையை ஒட்டி பல்வேறு தலைப்புகளில் கலைப் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், கலைகள், குறித்து ரீல்ஸ் போட்டி, ஜல்லிக்கட்டு மற்றும் காளைகள் குறித்த பதிவுகள், பொங்கல் பண்டிகை குறித்த ஆவணப்பட போட்டி நடத்தப்படுகிறது. இவை சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும் படைப்புகள் வரும் 20ம் தேதிக்குள் சென்னை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

News January 8, 2025

அரியலூர்: பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்

image

தைப் பொங்கலுக்கு முதல் நாளான போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீட்டில் வேண்டாத பொருட்களை எரிப்பது வழக்கம் ஆனால் டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர காற்று மாசு ஏற்படுத்தும் கழிவுப்பொருட்களை எரிக்காமல், குப்பைகளை முறைப்படி அகற்றி, போகித் திருநாளை மாசு இல்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

அரியலூர்: பொங்கல் விழா புகைப்பட போட்டி

image

பொங்கல் பண்டிகை ஒட்டி உழவும் மரபும் என்ற தலைப்பில் கலை போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி தமிழர் மரபுகளை காட்சிப்படுத்தும் கோலம், ஜல்லிக்கட்டு, பொங்கல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் எடுத்துக்காட்டும் புகைப்பட போட்டி நடைபெறுகின்றது. தங்கள் படைப்புகளை ஜன.20ம் தேதிக்குள் சென்னை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News January 8, 2025

அரியலூர்: போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலையில் விழுந்த ட்ரோன்

image

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அரியலூரில் நடைபெற்ற சாலை விபத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், அந்த நிகழ்ச்சியை படம் பிடித்த ட்ரோன் கட்டுப்பாட்டை இழந்து கார்த்திகேயன் தலையில் விழுந்தது.

News January 8, 2025

அரியலூர்: பொங்கல் தொகுப்பு எப்போது?

image

அரியலூர் மாவட்டத்தில் 2,48,876 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கு ஏதுவாக, பொங்கல் பரிசு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களோடு கொடுக்கப்பட்டுள்ள டோக்கன்கள் அடிப்படையில் ரேஷன் கடைகளில் நாளை (ஜன.9) முதல் வரும் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!