Ariyalur

News March 12, 2025

அரியலூர்: நவதானிய கண்காட்சியை பார்வையிட்ட ஆட்சியர்

image

செந்துறையில் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற பல்வேறு துறைகள் சார்ந்த கண்காட்சியில் நவதானியம் வகையான அரிசிகளை கண்காட்சியில் அமைத்திருந்தனர். அதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் பல வகையான அரிசிகள் நெல் வகைகள் என மாவட்ட ஆட்சியர் கேட்டு அறிந்தார். இதில் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News March 12, 2025

அரியலூர்: போக்குவரத்துதுறை காலி பணியிடம் குறித்த அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டல பணியிடங்களுக்கான ஆண், பெண் இருபாலர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணிக்காலியிடம் அரியலூர் மண்டலத்திற்கு நிரப்புதல் தொடர்பாக அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் ஏப்-14 ஆம் தேதிக்குள் அலுவலக வேலைநாட்களில் உரிய ஆவணங்களுடன் நேரில்சென்று பதிவினை சரிபார்க்க ஆட்சியர் அறிவிப்பு.

News March 12, 2025

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. 300-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான இந்த முகாமில், 18 முதல் 45 வயது வரையிலான 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையும் படித்த வேலைநாடுனர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…

News March 11, 2025

செந்துறையில் மக்கள் தொடர்பு முகாம்- ஆட்சியர் அறிவிப்பு

image

செந்துறை வட்டத்திற்குட்பட்ட செந்துறை ஞானாம்ப ஞானாம்பாள் திருமண மண்டபத்தில் நாளை காலை 11 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அளிக்கும் மனுக்களை பெற உள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கபட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கபட உள்ளது. எனவே செந்துறை பகுதி பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளபட்டுள்ளது

News March 11, 2025

உடையார்பாளையம்: பள்ளி வேன்- சரக்கு வாகனம் மோதி விபத்து 

image

உடையார்பாளையம் அருகே துளாங்குறிச்சி கிராமத்தில் சௌடாம்பிகா பள்ளி வாகனமும் சரக்குந்து வாகனமும் நேருக்கு நேர் மோதியதிக் கொண்டதில் சரக்கு வாகனத்தின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. சரக்குந்தில் பயணம் செய்தவர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 10, 2025

அரியலூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு- இன்றே கடைசி நாள்

image

தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.10) கடைசி நாளாகும். பிறரும் பயனடைய SHARE பண்ணுங்க…

News March 10, 2025

மேலமைக்கேல்பட்டி ஜல்லிக்கட்டுக்கு பதிவு செய்ய அழைப்பு

image

அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் அருகேயுள்ள மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் மாா்ச் 15ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில், பங்கேற்க உள்ள காளைகள், வீரா்களும் வரும் மாா்ச் 10ஆம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் மாா்ச் 12ஆம் தேதி (புதன்கிழமை) மாலைக்குள் <>https://ariyalur.nic.in<<>> என்ற இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

News March 9, 2025

ஆசியாவின் மிகப்பெரிய யானை சுதை சிற்பம்

image

அரியலூர் மாவட்டம், சலுப்பை கிராமத்தின் எல்லையில் பழங்கால யானை சுதை சிற்பம் ஒன்று உள்ளது. வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்புக் கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்ட அந்த யானை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பமாக காட்சியளிக்கிறது. இந்த சுதை சிற்பத்தை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக 2020ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.

News March 9, 2025

ஊஞ்சல் ஆடிய 12வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

image

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார் கீழ காலனி தெருவைச் சேர்ந்த வீராசாமி என்பவரது மகன் எபிசாமுவேல்(12). இவர் நேற்று வீட்டிற்கு அருகில் உள்ள முந்திரி தோட்டத்தில் இருக்கும் மரத்தில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது , சேலை கழுத்தில் இறுகி இறந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 8, 2025

அரியலூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

image

தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச்.10 கடைசி நாளாகும். பிறரும் பயனடைய SHARE பண்ணுங்க…

error: Content is protected !!