Ariyalur

News August 11, 2024

அரியலூர் மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

image

தமிழகத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 10, 2024

அரியலூர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நற்செய்தி

image

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 472 நியாய விலைக்கடைகளிலும், கடந்த மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகள் பெறாதவர்கள் ஆகஸ்ட் மாதம் முழுவதும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இந்த மாதத்தில் தங்கள் குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 10, 2024

போதைப் பொருட்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கூட்டம்

image

அரியலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ எனும் இலக்கை அடையும் வகையில் போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பிரதான கூட்டங்களில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News August 10, 2024

கொள்ளிடத்தில் குளிக்கச் சென்றவர் மாயம்

image

அரியலூர் மாவட்டம் தாபழூர் அடுத்த அண்ணகாரம்பேட்டை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ். நேற்று அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் புகார் அளித்ததின் பேரில் தா பழூர் போலீசார் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் உதவியுடன் கொள்ளிடம் ஆற்றில் செல்வராஜை தேடி வருகின்றனர். குளிக்க சென்றவர் வீடு திரும்பாததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஷேர் செய்யவும்

News August 10, 2024

சீர் மரபினருக்கான கடனுதவி

image

பெரம்பலூரில் மத்திய அரசின் SEED திட்டத்தின் கீழ் சீர்மரபினர் இனத்தை சார்ந்த பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, நிலம் வாங்க, வீடு கட்ட கடனுதவி, தொழில் செய்ய கடனுதவி ஆகியவை வழங்கப்படுகின்றன. மேற்கண்ட திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் மத்திய அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதை ஷேர் செய்யவும்.

News August 9, 2024

சீர் மரபினருக்கான கடனுதவி

image

மத்திய அரசால் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு SEED திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, நிலம் வாங்க, வீடு கட்ட கடனுதவி, தொழில் செய்ய கடனுதவி ஆகியவை வழங்கப்படுகின்றன. மேற்கண்ட திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் மத்திய அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News August 9, 2024

செந்துறைக்குட்பட்ட  ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு புதிய வாகனம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய வாகனங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News August 9, 2024

அரியலூரில் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் கைது

image

ஜெயங்கொண்டத்தில் பத்திரப் பதிவுக்கு ரூ.1500 லஞ்சம் வாங்கிய பத்திரப் பதிவு அலுவலர் பிரகாஷ் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரசாயனம் தடவிய பண நோட்டுகளை பெற்றபோது மறந்திருந்த லஞ்சஒழிப்பு துறை போலீசார் அலுவலக உதவியாளர் சக்திவேல், பதிவு அலுவலர் ஆகிய இருவரை கையும் களவுமாக பிடித்தனர்.பின்பு பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து போலீசார் புகார் மனுவை பெற்று விசாரணை செய்து வருகின்றனர்.

News August 8, 2024

அரியலூர் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு 

image

அரியலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை மற்றும் ரயில்வே சார்பில் அரியலூர் ரயில் நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகா தாய்பாலின் முக்கியத்துவம், தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் வகீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News August 8, 2024

அரியலூரில் ரேஷன் குறைத்தீர் கூட்டம்

image

அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் துறை சம்மந்தமான பொது மக்கள் குறைதீர் முகாம் வரும் 10-ம் தேதி அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.