India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு 15.08.2024 அன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்கீழ் அரியலூர் மாவட்டத்தில் 1333 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற மாணவர்கள் https://www.tamilvalarchithurai.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக அக் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
அரியலூர் மாதா கோவில் அருகே அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று மாலை ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கினைக் கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் காவல்துறையினரின் கைகளில் அதிகமான அதிகாரத்தை குவிக்கும் 3 குற்றவியல் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஏஐடியுசி, சிஐடியு, தொமுசா, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 438 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபார்த்தல் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணி ஆணைகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார். இதில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா பழூர் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திரத் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 100நாள் வேலை திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களால் கொண்டுவரப்படும் பிற விவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராமத்தின் அருகே வி. கைகாட்டியிலிருந்து அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்த கொரியர் வேன் மீது டேங்கர் லாரி மோதியதில் கொரியர் வேன் நிலை தடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்து. இதில் யாருக்கும் எவ்வித காயம் இன்றி உயிர் தப்பினர். இதனையடுத்து, விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று, 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 40 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அரியலூரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை இயங்கினால், பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (19). வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது மோட்டார் சைக்கிள் காணாமல் போயுள்ளது. இதுதொடர்பாக செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது சிறுவன், பெரம்பலூர் மாவட்டடத்தை சேர்ந்த இப்ராஹிம், வசந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.