India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைத்தீர் முகாம். 08/03/25 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும். அரியலூர், உடையார்பாளையம், செந்துறை மற்றும்ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. மேற்கண்ட முகாமினை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். பொதுமக்கள் குறைதீர்க்க
அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் பொருளாதார நிலையை உயர்த்திட சென்னை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 1,000 பழங்குடியின இளைஞர் களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்க திறன்பயிற்சி சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான சேர்க்கை முகாம் நாளை மறுநாள் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் லிப்ரா ஹாலில் நடைபெறுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியராக பணியாற்றிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா(30) என்பவரை பிப்.28ஆம் தேதி கொலை செய்ததாக, கோடாலி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்(35), அவரது மனைவி விமலா(32) ஆகியோரை கடந்த 2ஆம் தேதி கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மகேஷின் அக்காள் மகன் விக்னேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனை போலீசார் தேடிய நிலையில், 17 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.
அரியலூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஜோசப் கண் மருத்துவமணை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச சிறப்பு கண் மருத்துவ முகாம் வெங்கடகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மார்ச் 07ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. கண்ணில் கிட்ட பார்வை, தூர பார்வை, கண்ணில் புரை மற்றும் தலைவலி உள்ளிட்ட போன்ற கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பரிசோதனை செய்யப்படும்.
அரியலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமையில் வாழும் நலிவுற்றோர்கள் ஆகியோருக்கு அரசு உதவித் தொகை, திறன் பயிற்சிகள், தொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட அரசு உதவித்திட்ட தேவைகளை கண்டறிந்து, அவை அரசுத்துறைகள் மூலம் கிடைத்திட ஏதுவாக ஒரு வட்டாரத்திற்கு 2 முகாம்கள் வீதம் தேவை கண்டறிதல் முகாம் நடத்தப்படவுள்ளது. அதன்படி செந்துறை வட்டாரத்தில் இன்று நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியிடம் உடையார்பாளையம் வட்டம், தா.பழூர், சீனிவாசபுரத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்ற முதியவர் தனக்கு இரு காதுகளும் கேட்காது எனவும், தனக்கு தமிழக அரசு வழங்கும் இலவச காது கேட்கும் கருவியினை வழங்கி உதவுமாறு மனு அளித்தார். இதனையடுத்து மறுநிமிடமே ஆட்சியர் மாற்றுத்திறனாளி நல துறையினர் மூலம் முதியவருக்கு காது கேட்கும் கருவிகளை வழங்கினார்.
அரியலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திங்கட்கிழமையான இன்று (மார்ச் 03) மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் தங்கள் சொந்த பிரச்சினை மற்றும் பொது பிரச்சினைகளை மனு மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கலாம். இந்த குறைதீர்வு கூட்டமானது ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 172 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் 5271 மாணவர்களும் 4088 மாணவிகளும் என மொத்தம் 10079 மாணவ மாணவிகள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 60 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு எழுத உள்ளனர் என ஆட்சியர் கூறினார்.
அரியலூர் கலெக்டர் பொ.ரத்தினசாமி அறிக்கை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் மாற்றாக பொருட்களை பயன்படுத்த பங்களிப்பு செய்த பள்ளி கல்லூரி வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது. 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் ரூ.18 லட்சம் பரிசு வழங்கப்படும். இதன் விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலக இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அரி+இல்+ஊர்= அரியலூர் (அரி- விஷ்ணு; இல்- உறைவிடம்; ஊர்- பகுதி) விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கமே இந்த அரியலூர் என்று கூறப்படுகிறது. மேலும் விஷ்ணு சாந்தி வைணவ வழிபாட்டுக் கோயில்கள் அதிகமாக உள்ள பகுதி என்பதாலும் இவ்வூருக்கு அரியலூர் என்று பெயர் ஏற்பட்டது என கூறப்படுகிறது. நம்ம ஊரு பெருமையை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க…
Sorry, no posts matched your criteria.