India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் விக்கிரமங்கலம் கிராமம் நிறுவப்பட்டு அவரது குடும்பப் பெயரால் விக்கிரமசோழபுரம் என அழைக்கப்பட்டது. சோழர் காலத்தில் விக்கிரமசோழபுரம், ஒரு புகழ்பெற்ற வர்த்தக மற்றும் வாணிப மையமாக இருந்தது. மேலும், இங்குள்ள சோழர் காலத்திய அழகிய ஜெயின் மற்றும் புத்தர் சிற்பங்கள் இந்த கிராமத்தில் இன்றும் பாதுகாப்பாக உள்ளது. நம்ம ஊர் பெருமையை பிறருக்கும் SHARE பண்ணுங்க…
அரியலூர் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்கள் உரிய கள விசாரணைக்கு பிறகு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலமாக நேரடியாக வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற இடைத்தரகர்களிடமோ, இ-சேவை மைய பணியாளர்களிடமோ பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இந்த தகவலை SHARE பண்ணுங்க..
தாட்கோ மூலம் பி.எஸ்சி, எம்.எஸ்சி நர்சிங்; போஸ்ட் பேசிக் பி.எஸ்சி நர்சிங் மற்றும் பொது செவிலியர் ஆகிய மருத்துவ படிப்புகளில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் சேர தாட்கோ <
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <
தமிழ்நாடு ஒருங்கிணைந்த நீரிழிவு பாத மருத்துவ திட்டம் மூலம், அரியலூர் அரசு மருத்துவமனையில் பாத சிறப்பு சிகிச்சை பிரிவு திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், நீரிழிவு நோயாளிகள் அனைவரும் சிகிச்சை பெறலாமென மருத்துவமனையின் டீன் முத்துக்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இத்தகவலை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SHARE பண்ணுங்க..
தமிழக சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 15) வேளாண்துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் அரியலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் முந்திரி சார்ந்த தொழில் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க, தமிழ்நாடு முந்திரி வாரியம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட மக்களே SHARE பண்ணுங்க…
அரியலூர் மாவட்டத்தில், தா.பழுர் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் என்னும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீபுரந்தான் வேதநாராயண பெருமாள் கோயிலில் நின்ற கோலம், அமர்ந்த கோலம், சயன கோலம் என 3 கோலங்களில் பெருமாள் காட்சி தரும் சிறப்பம்சம் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலுக்கு போனால் வாழ்க்கையே மாறும் என்பது ஐதீகம். நீங்களும் இங்கு ஒருமுறை சென்றுவாருங்கள் மற்றும் பெருமாள் பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க…
மத்திய அரசு வழங்கும் பிரதமர் கௌரவ உதவித்தொகை உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் இணையவழியில் பதிவு செய்து, தேசிய அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு 20-வது தவணை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே தேசிய அடையாள எண் பெறாத விவசாயிகள் உடனடியாக இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். SHARE IT NOW
அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தாட்கோ மூலம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டியூட்டில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள மாணவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்திற்கு புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம் தமிழக அரசு பட்ஜெட் தாக்களில் அறிவிப்பு தமிழக அரசின் இன்றைய பட்ஜெட் தாக்களில் 152 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்க பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதில் 1308 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதில் அரியலூர் மாவட்டம் தா பழூரில் 1 அரசு தொழில் பயிற்சி நிலையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.