Ariyalur

News September 21, 2024

அரியலூர்-மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்தரங்கு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (ம) மேற்பார்வையாளர்களுக்கு கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு கடமைகள் (ம) பொறுப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

News September 21, 2024

அரியலூர்: பெண்களுக்கு தொழிலாளர்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்

image

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள பெண் தொழிலாளர்களுக்கு சுயமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் திட்டம் அறிமுகம். அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுனர் நல வாரியத்தில் உள்ள பெண் தொழிலாளர்கள் தங்களது அட்டை, ஆவணங்களுடன் அரியலூரில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

அரியலூர்-ஆட்டோ வாங்க ஒரு லட்சம்

image

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் தொழிலாளர்களுக்கு சுயமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1,00,000 மானியம் வழங்கப்படும் திட்டம் உள்ளது. எனவே, அமைப்புசாரா ஆட்டோ ஓட்டுநர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் தொழிலாளர்கள் அனைத்து ஆவணங்களுடன் அரியலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரை நேரில் சந்தித்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

அரியலூரில் அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்

image

அரியலூர் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வந்தநிலையில், அடுத்து வரும் 7 சனிக்கிழமைகளில் செப் – 21, 28, அக்டோபர் 5, 19, 26, நவம்பர் 9, 23 ஆகிய தேதிகளில் அரை நாள் மட்டும் வகுப்புகளை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவை தேர்தல் காரணமாக விடுமுறை தினங்களில் மாற்றம் ஏற்பட்டது. அதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

News September 20, 2024

அரியலூரில் கோட்டாட்சியர் பணியிட மாற்றம்

image

தமிழ்நாடு அளவில் தமிழக அரசு துணை ஆட்சியர் நிலையில் பணி மாறுதல் செய்து ஆணை பிறப்பித்துள்ளது. இதில் அரியலூர் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் பணி இடமாற்றம் செய்து மதுரை மாவட்ட ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக செலினி கலைச்செல்விக்கு பதிலாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

News September 19, 2024

அரியலூரில் தபால் அனுப்பும் போராட்டம்

image

அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் முத்து முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கை அடங்கிய மொத்தம் 668 மனுக்களை தபால் மூலம் அனுப்பிவைத்தனர்.

News September 18, 2024

அரியலூர்- கடனுதவி வழங்கிய ஆட்சியர்

image

உடையார்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடன்கள் குறித்து கேட்டறிந்தார். திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 07 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.69.70 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

News September 18, 2024

சிங்கப்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அரியலூர் கவிஞர்

image

நேற்று மாலை சிங்கப்பூர் மண்ணில் ”சொல்லாடும் முன்றில் “அமைப்பின் சார்பாக நிகழ்ந்த மூன்றில் கவியரங்கத்தில் கல்லும் பாடாதோ கவி என்கிற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் செந்துறை ஒன்றியம் உகந்தநாயகன் குடிக்காட்டை சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான சி. கருணாகரசு அவர்கள் தலைமை ஏற்று தனது படைப்பையும் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

News September 18, 2024

கொலை முயற்சி வழக்கு: 2 பேரை தேடும் போலீசார்

image

செந்துறை அருகே மணல் கடத்தலை தடுக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தளவாய் காவல் நிலைய காவலர் தமிழ்ச்செல்வன் மீது வாகனத்தை மோதி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் நேற்று மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கில்தொடர்புடைய அஜித்குமார் மற்றும் சஞ்சய் பாலா ஆகிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

News September 18, 2024

அரியலூர் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை

image

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் தலைமையில் அதிரடி நடவடிக்கை எடுத்த குவாகம் காவல் ஆய்வாளர் திரு மணிவண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு ராஜவேல் தலைமையில் தனி படை போலீஸ் குழு சந்தேகத்துக்கிடமாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்த முயற்சித்த போலீசார் மீது மோதி கொலை முயற்சியில் ஈடுபட்ட நாகல்குழி சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியசிறையில் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.