Ariyalur

News October 8, 2024

அரியலூர் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் 373 மனுக்கள்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டாரங்களில் மக்கள் குறைகளைத் தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் உள்ளிட்ட 373 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

News October 8, 2024

அரியலூர் மருத்துவமனைகளுக்கு பாராட்டு

image

மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் இணைந்து செயல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்ததுள்ளது. இதை முன்னிட்டு இத்திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் காப்பீட்டுத்திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி வழங்கினார்.

News October 8, 2024

அரியலூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

image

அரியலூர் மாவட்டத்தில் எதிர்வரும் 01.01.2025 ஆம் நாளை தகுதி நாளாக கொண்டு 2025 ஆம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடும் பொருட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், பிழை திருத்தம் செய்தல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் நவ 9, 10, 23, 24 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக கலெக்டர் ரத்தினசாமி அறிவிப்பு.

News October 7, 2024

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

அரியலூர் மாவட்டம் ஒத்தாகோயில் காலனி தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர், திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலகிருஷ்ணன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 6, 2024

அரியலூர் மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் நாளை, அக்டோபர் 7 ஆம் தேதி இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர் மற்றும் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News October 6, 2024

அரியலூர் ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற மகளிர்

image

மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட 05 சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை, பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை துணை முதலமைச்சர் வழங்கினார். இதனையடுத்து நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் மூலம் 2022-23 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருது பெற்ற அரியலூர் நகரம் முனியப்பர் தெருவைச் சேர்ந்த துர்க்கை மகளிர் சுய உதவிக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியைநேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

News October 5, 2024

அரியலூரில் 128 பேருக்கு பணி நியமன ஆணை

image

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் 128 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. மேலும், 130 நபர்கள் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 8 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 968 நபர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News October 5, 2024

போதை மறுவாழ்வு மையத்தினை கலெக்டர் ஆய்வு

image

அரியலூர் பெரியார் நகர் முதலாவது தெருவில் செயல்படும் சுபம் மது போதை மறுவாழ்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 15 மது போதை தடுப்பு சிகிச்சையில் உள்ள உள்நோயாளிகளை பார்வையிட்டு அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், ஆற்றப்படுத்துதல் மற்றும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

News October 4, 2024

அரியலூர்- மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

image

அரியலூர் அருகே ஏழேரி கிராமத்தைச் சேர்ந்த 18 வயது சிறுமியை கடந்த 2018 ம் வருடம் டிசம்பர் மாதம் அருள் செல்வன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் சிறுமியை கடத்திச் சென்று பாலில் பலாத்காரம் செய்ததாக அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இருவரையும் கைது செய்தனர் இவ்வழக்கின் விசாரணையில் அருள்செல்வனுக்கு 30 ஆண்டுகள் சிறை, பழனிசாமிக்கு 10ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்

News October 4, 2024

அரியலூர்: உதவித்தொகை பெற கலெக்டர் அழைப்பு

image

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் 4000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பெறுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் அரியலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்று 31ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.