India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர் (Salesman), கட்டுநர்கள் (Packer) ஆகிய 34 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தகுந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து www.drbariyalur.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.
ஆண்டிமடம் வட்டாரத்தில் இன்று அக்டோபர் 9 அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி விளந்தையில் சர்வதேச பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு கட்டுரை போட்டி மற்றும் ஓவிய போட்டி நடத்தப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு சமூக நல அலுவலர் மற்றும் மகளிர் அதிகாரம் மைய பணியாளர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பெண் குழந்தை தினத்தை பற்றி விழிப்புணர்வு அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டது.
கீழப்பழுவூர் அருகே திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கரவாகனம் வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதுகுறித்து கீழப்பழூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் உடல் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. அப்போது மனு கொடுக்க வந்த 15 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜிடம் நேரடியாக தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டது.
விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும்; மழைக்காலங்களில் வயல்வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்லும் போது பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகின்றனர் இதைத் தவிர்க்கும் வகையில், விவசாயிகள் தங்களது பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களை அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறையை அணுகி தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடபட உள்ளது. இதனையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் அக்டோபர் 19 ஆம் தேதி வரை இசேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தா.பழூர் அருகே உள்ள வேம்புக்குடி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்க உள்ளனர். மேலும் முகாமில் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் காவல்துறையின் சார்பாக அவசர அழைப்பு செல் போன் நம்பர் வெளியிடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவின் பேரில், மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுபவரை காவல் துறைக்கு தெரிவிக்கும் விதமாக, பத்துக்கும் மேற்பட்ட செல்போன் நம்பரை அவசர காலத்தில் உபயோகிக்க மீண்டும் காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் ஏழ்மை நிலையிலுள்ள, கணவனை இழந்த, கைவிடப்பட்ட (ம) ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக்குஞ்சுகள் (40 கோழிக்குஞ்சுகள் / ஒரு பயனாளி) 50% மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பெண்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுக வேண்டுமென கலெக்டர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
அரியலுர் மாவட்டத்தில் தனிநபரால் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகங்களில், சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நூலகத்தினை தேர்வு செய்து அரியலூர் மாவட்டத்தில் நடத்தப்படும் புத்தகக் காட்சியில் “சொந்த நூலகங்களுக்கு விருது” 3000 மதிப்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியரால் வழங்கி கௌரவிக்கப்படும் என கலெக்டர் அறிவிப்பு. விண்ணப்பிக்க அக்-20 கடைசி நாள், தொடர்பு கொள்ள- 9486069766
Sorry, no posts matched your criteria.