India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அரியலூர் மாவட்டத்தில் அம்பேத்கார் பிறந்தநாளையொட்டி ஜூலை.26 அன்று அரியலூர் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் பரிசு வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்று கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில், ஜூலை மாதத்திற்கான ‘உங்களைத் தேட உங்கள் ஊரில்’ திட்ட முகாம் வரும் ஜூலை 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக மேற்குறிப்பிட்ட நாட்களுக்கு பதிலாக ஜூலை 24, 25 ஆகிய தேதிகளில் திட்ட முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் <
அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 17) கடைசி நாளாகும். அரியலூரை சேர்ந்த 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அரியலூர் துணைமின் நிலையத்தில் ஜூலை.20 அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தேளூர் துணை மின் நிலையம், செந்துறை துணை மின் நிலையம், உடையார் துணை மின் நிலையம், அரியலூரில் ஒரு சில பகுதிகளில் காலை 9 மணி முதல் பாராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், தொழில் விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா இன்று வழங்கி பாராட்டினார்.
அரியலூர் அருகே கீழப்பாவூரில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கிராமப்புறங்களில் சுய வேலைவாய்ப்பை உருவாக்க பல்வேறு பயிற்சிகள் வழங்கி வருகிறது. இம்மையத்தில் பயிற்சி பெற்று வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக விளங்கும் பெண்களுக்கு அரியலுார் மாவட்ட அரங்கில் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
அரியலூர் அரசு மேல்நிலைபள்ளியில் ஜூலை 25-ம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டும், ஜூலை 26-ம் தேதி முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சு போட்டிகள் நடத்தபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கபட உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.