Ariyalur

News October 16, 2024

அரியலூரில் அவசர உதவி எண் அறிவிப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்திற்கு இன்று மற்றும் நாளை கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மழைக்கால அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News October 15, 2024

அரியலூரில் அவசர உதவி எண் அறிவிப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் அக்டோபர் 15ஆம் தேதி மற்றும் அக்டோபர் 16ஆம் தேதி கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மழைக்கால அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2024

அரியலூர் அருகே வெடிகள் பறிமுதல்

image

திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஐயாறப்பன். இவர் வெடிக்கடை மற்றும் தயாரிப்பு ஆலை அமைத்து உள்ளார். இந்நிலையில் இந்தாண்டு உரிமம் புதுப்பிக்காமல் வெடி தயாரிப்பதாக திருமானூர் போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் போலீசார் ஆய்வு செய்ததில், அனுமதியின்றி வெடி தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து குடோனில் பதுக்கி வைத்திருந்த வெடிகளை திருமானூர் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

News October 15, 2024

மழை குறித்து அறிய நவீன செயலி

image

தமிழ்நாடு அரசு வடகிழக்கு பருவமழை குறித்து அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் TN-Alert என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியின் மூலம் மழை பெய்யக்கூடிய இடங்கள் மற்றும் வெள்ள அபாயம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். எனவே பொதுமக்கள் தங்களின் செல்போனில் TN-Alert என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 14, 2024

அரியலூர் மாவட்டத்துக்கு மிக கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் அக்.15-ஆம் தேதி (செவ்வாய்) மற்றும் அக்.16-ஆம் தேதி (புதன்கிழமை) கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40-55 கி.மீ வரை பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

ஜெயங்கொண்டம்: பள்ளி மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு

image

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரத்தின் மகன் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் குருவாலப்பர் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள காலி மனையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அப்பகுதி பொதுமக்களின் புகாரின் பேரில் மீன் சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 14, 2024

அரியலூரில் 9.5 மில்லி மீட்டர் மழை

image

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. அதனடிப்படையில் அரியலூரில் 9.5 மில்லி மீட்டர், திருமானூர் பகுதியில் 9.4 மில்லி மீட்டர், சித்தமல்லி பகுதியில் 5 மில்லி மீட்டர், குருவாடி பகுதியில் 6 மில்லி மீட்டர் என மொத்தம் அரியலூர் மாவட்டத்தில் 29. 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என ஆட்சியரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

அரியலூர் இளைஞர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

image

அரியலூர் மேலகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி தவுத்தாய்குளம் சாலையில் உள்ள மதுக்கூடத்தில் தகராறு செய்து தன்னுடன் வந்த ஒருவரை, பாட்டிலை உடைத்து தாக்கியதோடு மதுக்கூட உரிமையாளரை தாக்கி அங்கிருந்த பொருட்களை உடைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு குண்டர் தடுப்பு சட்டம் பரிந்துரைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News October 13, 2024

அரியலூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்றம் சம்பவங்களை குறைக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் மாவட்டம் முழுவதும் தினந்தோறும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (13.10.2024) ரோந்து பணி செல்லும் காவலர்களின் தொலை பேசி என்னை மாவட்ட காவல் துறை அறிவித்தது.

News October 13, 2024

அரியலூர் இளைஞர் மீது குண்டர் தடுப்பு சட்டம்

image

அரியலூர் மாவட்டம், மேலகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி தவுத்தாய்குளம் சாலையில் உள்ள மதுக்கூடத்தில் தகராறு செய்து தன்னுடன் வந்த ஒருவரை, பாட்டிலை உடைத்து தாக்கியதோடு மதுக்கூட உரிமையாளரை தாக்கி அங்கிருந்த பொருட்களை உடைத்துள்ளார். இதனையடுத்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் இன்று சிறையில் அடைப்பு.