Ariyalur

News June 12, 2024

ஜூன்.13 வரை விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

அரியலூர், ஆண்டிமடம் அரசு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர இணையதளம் வாயிலாக ஜூன்.13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கட்டணம் ரூ.50 இணையதளம் வாயிலாக செலுத்தலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் தொழிற்பயிற்சி நிலையம் தொலைபேசி -9499055877, ஆண்டிமடம் தொழிற்பயிற்சி -9499055857 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

நாளை மின்தடை அறிவிப்பு 

image

அரியலூர் கூத்தூர் துணைமின் நிலையத்தில்  நாளை(ஜூன்.13) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அரியலூர் மேற்கு பகுதி, மேலமாத்தூர், ஜெமீன் ஆத்தூர், கூத்தூர், கூடலூர், வெண்மணி, தீம்மூர், மேத்தால் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்லபாண்டி தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

போராட்டம் அறிவிப்பை தொடர்ந்து பணிகள் ஆரம்பம்

image

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த கோட்டைக்காடு முதல் பெண்ணாடம் செல்லும் உயர்மட்ட மேம்பாலத்தில் அணுகு சாலை அமைப்பதற்கான பணிகளை விரைந்து முடித்திட வலியுறுத்தி வரும் 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மேம்பாலம் சாலை இணைப்பு போராட்ட குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் பெண்ணாடம், சௌந்திர சோழபுரம் பகுதியில் மேம்பாலத்திற்கான அணுகு சாலை அமைக்கும் பணி நேற்று(ஜூன் 11) தொடங்கியது.

News June 11, 2024

அரியலூர்: பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

image

அரியலூர் மாவட்டத்தில் மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50 டூவீலர்கள் ஜீன்-18 காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்கள், ஏலம் விடப்படும் அன்றைய நாளில் காலை 8 மணிக்கு முன்பணம் ரூ.1000 செலுத்தி தங்களது பெயர் முகவரியை பதிவு செய்து கொண்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News June 10, 2024

ஆட்சியரிடம் குவிந்த மனுக்கள்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதியோர் உதவித் தொகை இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 190 மனுக்களை ஆட்சியர் பெற்றார். இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

News June 9, 2024

பெண்ணாடம் பாலம் இணைப்பு பணிகள் ஆய்வு

image

அரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு – பெண்ணாடம் வெள்ளாறு மேம்பாலம் இணைப்பு பணிகள் குறித்து சாலை இணைப்பு போராட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். வெள்ளாற்று மேம்பாலத்தின் பணிகள் மிகவும் மெத்தனமாக நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினர். இதனை கண்டித்து வரும் 20 ஆம் தேதி அனைத்து கட்சியினர், பொதுமக்கள் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சாலை இணைப்பு போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.

News June 8, 2024

அரியலூர்: 10 கடைகளுக்கு அபராதம்

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வணிக நிறுவனங்களில் நகராட்சி ஆணையர் அசோக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட 30 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் 10 கடைகளுக்கும் சேர்த்து ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தினர்.

News June 8, 2024

உலக நன்மை வேண்டி வழிபாடு

image

அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் சிவன் கோவிலில் மாணிக்கவாசகர், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவனடியார்கள் திருகூட்டத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சிவ தொண்டர்கள் கலந்து கொண்டு திருவாசகத்தை ஓதினர். முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. உலக நன்மை வேண்டி இந்நிகழ்வு நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

News June 8, 2024

அரியலூர்-87 மையங்களில் போட்டித் தேர்வு

image

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-IV தேர்வுகள் வருகின்ற 09ம் தேதி நடைபெறுகிறது. இதில் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய 4 வட்டங்களில் உள்ள 87 தேர்வு கூடங்களில் 24, 745 தேர்வாளர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு கூடங்களில்
தேர்வர்களுக்கு தேவையான குடிநீர் மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் வழக்கம் போல் நடைபெறும்

image

அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. தற்பொழுது தேர்தல் முடிவுகள் வெளிவந்ததை அடுத்து இனி வழக்கம் போல் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். எனவே பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை மனுவாக குறை தீர்க்கும் கூட்டத்தில் அளிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

error: Content is protected !!