Ariyalur

News August 8, 2025

அரியலூர்: டிகிரி போதும்! உதவியாளர் வேலை ரெடி

image

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து ஆக.,17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு திருச்சியில் நடைபெற உள்ளது. இத்தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 8, 2025

அரியலூர்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

அரியலூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>https://pgportal.gov.in/<<>> என்ற இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News August 8, 2025

அரியலூர்: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ முகாம்

image

அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (ஆகஸ்ட் 9) தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத அமைப்புச்சார தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. எனவே பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

அரியலூர்: அரசு பேருந்துகள் குறித்த புகார் எண்

image

அரியலூர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து புகார்/ குறைகளை கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் (0435- 2403724-26) தெரிவிக்கலாம். இதில் காலதாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர், நடத்துநர் பயணிகளிடம் நடத்தை விதிகளை மீறி செயல்படுவது, நேரத்திற்கு வராமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து புகார் தெரிவிக்கலாம். இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 7, 2025

அரியலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் சமூக நல அலுவலரை அணுகவும். SHARE பண்ணுங்க!

News August 7, 2025

அரியலூர்: பேருந்தில் Luggage-ஐ மறந்துட்டீங்களா?

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE IT

News August 7, 2025

அரியலூர் கூட்டுறவு வங்கியில் ரூ.96,395 சம்பளத்தில் வேலை!

image

அரியலூர் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 28 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு மாதம் ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வருகிற ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News August 7, 2025

அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் (ஆகஸ்ட் 6) ரோந்து பணி செல்லக்கூடிய அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்தில் இந்த எண்ணை தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கும் இந்த தகவலை பகிரவும்.

News August 6, 2025

அரியலூர்: BANK லாக்கரில் நகை இருக்கா? கவனம்!

image

BANK லாக்கரில் நகையை வைக்கும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க! உங்கள் நகை பற்றிய விவரங்கள் வங்கிக்கு தெரியாது. தீ விபத்து, அல்லது திருட்டு போனால் RBI விதிமுறைப்படி காப்பீட்டு தொகை மட்டுமே வழங்கப்படும். லாக்கரை பொறுத்து ஆண்டுக்கு ரூ.1,500 முதல் 12,000 வரை கட்டணம் செலுத்த வேண்டும். வங்கி விடுமுறை, அரசு விடுமுறையில் லாக்கரில் நகை எடுக்கவோ வைக்கவோ முடியாது. அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!

News August 6, 2025

முதலமைச்சர் கோப்பை போட்டிக்கான QR குறியீடு அறிமுகம்

image

முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த போட்டிகளுக்கான முன்பதிவு “க்யூ ஆர்” குறியீட்டினை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிமுகம் செய்து வைத்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!