India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி பெற்றது. 17ஆவது ஐ.பி.எல் தொடரின் 3ஆவது போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த KNR அணி 208 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 209 ரன்கள் இலக்கை துரத்திய SRH அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது.

இன்று (மார்ச் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

*இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு ₹500 வழங்குவோம் – ஸ்டாலின்
*அண்ணாமலையுடன் அரசியல் விவாதம் செய்ய தயார் – சிங்கை ராமசந்திரன்
*விதிகளை மீறிய ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ₹80 லட்சம் அபராதம் விதிப்பு – டிஜிசிஏ
*ஐ.பி.எல் தொடரின் சில போட்டிகளில் தோனி விளையாடாமல் போக வாய்ப்புள்ளது – கிறிஸ் கெய்ல்
*அரபிக் கடலில் 10 போர் கப்பல்களை இந்தியா நிலைநிறுத்தியுள்ளது.

உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலை தூய்மைப்படுத்த இஞ்சி மல்லி கசாயம் பருகலாம் என்று சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். கைப்பிடி கொத்தமல்லியை சுத்தப்படுத்தி, பூண்டு, மஞ்சள், இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்துகொள்ள வேண்டும். எலுமிச்சை சாறு கலந்து, இந்த கசாயத்தை வெறும் வயிற்றில் 3 நாள்கள் குடித்தால் போதும், கல்லீரலில் உள்ள தொற்று & நச்சு அனைத்தும் வெளியேறிவிடுமாம்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் தன்வசம் வைத்திருந்த ஒரு சாதனையை இழந்துள்ளார். டி20 போட்டிகளில் இதுவரை நோ பால் வீசாத வீரர் என்ற சாதனையை இத்தனை ஆண்டுகளாக தன் வசம் வைத்திருந்தார். இன்று கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நோ பால் வீசியதால், இந்த சாதனையை இழந்துள்ளார். அதுமட்டுமின்றி இன்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 51 ரன்களையும் வாரி வழங்கியிருக்கிறார்.

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 வரை நடைபெற்றது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி மாதமே நடத்தி முடிக்கப்பட்டது. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 25ஆம் தேதி முடிவடைய உள்ளது. 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 26 – ஏப்ரல் 8 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், +2 தேர்வு முடிவுகள் மே மாதம் 6ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அமலாக்கத்துறை காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் இந்திய அரசியலுக்கே ஆபத்து என காங்கிரஸ் முன்னாள் MP சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார். மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்யும் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது காவலில் இருக்கும் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் நீடிப்பது என்ன மாதிரியான ஒழுக்கம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

நவ கிரகங்களின் தலைவனான சூரிய பகவான் தற்போது புதன் மற்றும் ராகுவோடு கூட்டணி சேர்ந்துள்ளார். இதனால் கடகம், துலாம், தனுசு, மீன ராசியினருக்கு அடி மேல் அடி விழப்போகிறது. வேலை பார்க்கும் இடத்தில் பிரச்னை, பொருளாதார நெருக்கடி, கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வருவது, எதிர்பார்த்த இடத்தில் பணம் கிடைக்காமல் போவது போன்ற பல்வேறு சங்கடமான நிகழ்வுகளை மேற்கண்ட ராசியினர் சந்திக்க உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரருமான எம்.எஸ்.தோனி அவ்வப்போது புதுப்புது ஹேர் ஸ்டைலில் தோன்றுவார். அந்த வகையில், அவர் தற்போது போனிடெய்ல் லுக்கில் அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சென்னை அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட அவர், போனிடெய்ல் லுக்கில் வலம்வந்தார். அது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும்போது, மீனவர்களுக்கு நாள்தோறும் ₹500 வழங்குவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சை, நாகை வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் விடியல் பாய்ச்சப்பட்டுள்ளது எனக் கூறினார். மேலும், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரது நலனுக்காகவும் தமிழக அரசு போராடுவதாகவும் அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.