News March 24, 2024
முதன்முறையாக நோ பால் வீசிய புவி!

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் தன்வசம் வைத்திருந்த ஒரு சாதனையை இழந்துள்ளார். டி20 போட்டிகளில் இதுவரை நோ பால் வீசாத வீரர் என்ற சாதனையை இத்தனை ஆண்டுகளாக தன் வசம் வைத்திருந்தார். இன்று கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நோ பால் வீசியதால், இந்த சாதனையை இழந்துள்ளார். அதுமட்டுமின்றி இன்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசி 51 ரன்களையும் வாரி வழங்கியிருக்கிறார்.
Similar News
News November 16, 2025
BJP, EC கூட்டு சதியை முறியடிக்க வேண்டும்: திருமா

BJP-ன் வாக்கு திருட்டை தடுப்பதற்கு TN மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிஹார் தேர்தல் முடிவுகளானது BJP, EC கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹாரில் நடந்ததுபோல TN-ல் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படாமல் இருக்கவும், BJP, EC-ன் கூட்டு சதியை முறியடிக்கவும் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து செயல்படுமாறு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
News November 16, 2025
ஆச்சரியமும் மர்மமும்: ஒரு கிராமத்தில் 450 இரட்டையர்கள்

ஒரு கிராமத்தில் 2 இரட்டையர்களை பார்ப்பதே அரிது. ஆனால், கேரளாவின் ‘கொதின்ஹி’ என்ற கிராமத்தில் 450 இரட்டையர்கள் உள்ளது ஆச்சரியத்தையும், மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெளியூர்களில் இருந்து இந்த கிராமத்திற்கு குடிபெயர்ந்தவர்களுக்கும் இரட்டையர்களே பிறக்கின்றனர். இதற்கான காரணத்தை அறிய ஆராய்ச்சியாளர்களும், மரபணு ஆய்வாளர்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்தும், இன்னும் விடை தெரியாமலேயே உள்ளது.
News November 16, 2025
PAK-ல் இருந்து டிரோன் வழியாக வெடிபொருள்கள் கடத்தல்

பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் வழியாக வெடிபொருட்கள், போதை மருந்துகள் கடத்தப்படுவதை NIA கண்டுபிடித்துள்ளது. இதற்கு மூளையாக செயல்பட்ட விஷால் பிரச்சார் என்ற நபர் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் எல்லையில் இருந்து டிரோன் வழியாக வரும் ஆயுதங்கள், போதைப்பொருள்கள் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கபட்டுள்ளது.


