India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இன்றைய போட்டியில் 21 ரன்கள் அடித்த கோலி, ஐபிஎல்லில் CSK அணிக்கு எதிராக 1006 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் CSK-க்கு எதிராக 1000 ரன்கள் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக தவான் 1057 ரன்கள் அடித்துள்ளார். ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் வார்னர் முதல் இடத்தில் உள்ளார். இவர் PBKS-க்கு எதிராக 1105, KKR-க்கு எதிராக 1075 ரன்கள் எடுத்துள்ளார்.

மோடியின் ஆணவத்தால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரின் மனைவி சுனிதா விமர்சித்துள்ளார். 3 முறை முதல்வராக இருந்த ஒருவரை, அதிகாரப்பசியின் காரணமாக மோடி கைது செய்துள்ளார். அவரை எதிர்ப்பவர்களை நசுக்க பார்க்கிறார். இது டெல்லி மக்களுக்கு செய்யும் துரோகம். கெஜ்ரிவால் உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும் அவர் மக்கள் பணி தொடரும். அவர் எப்போதும் மக்களுக்கான மனிதர் என சுனிதா தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் மறைந்த பின் நடிகர் லாரன்ஸ் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், விஜயகாந்த் எப்படி பிறருக்கு உதவினாரோ, அதேபோல் அவரது மகனுக்கு நாமும் உதவ வேண்டும் எனக் கூறியிருந்தார். மேலும், அவர் நடிக்கும் படத்தில் நானும் நடிக்க ரெடி என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், சண்முகப் பாண்டியன் நடிக்கும் ‘படைத்தலைவன்’ படத்தில் நடிப்பதற்காக லாரன்ஸ் 3 நாள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரவில் தூங்கச் செல்லும் முன் புகைப்பிடிக்கும் பழக்கம் ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். புகைப்பிடித்தல் புற்றுநோயை வரவழைக்கும் எனக் கூறினாலும், அதற்கு அடிமையானவர்கள் கைவிட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், புகைப்பிடித்த உடனே தூங்கச் செல்வது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் எனக் கூறியுள்ள மருத்துவர்கள், குறைந்தது 1 மணி நேரத்திற்கு முன் அதனை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி 20 ஓவர்களில் 173/6 ரன்கள் குவித்துள்ளது. ஆரம்பத்தில் ஆர்சிபி 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் தினேஷ் கார்த்திக் -அனுஜ் ராவத் ஜோடி சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. அனுஜ் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் விளாசினர். சிஎஸ்கே சார்பில் முஸ்தாஃபிர் ரஹ்மான் 4, தீபக் சாஹர் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்துள்ளார். அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக்கோரி இபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ஓபிஎஸ் கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு மார்ச் 25இல் விசாரணைக்கு வருகிறது.

17ஆவது ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் பெங்களூரு அணி தடுமாறி வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில், டு
பிளெஸிஸ் 35, கோலி 21, கிரீன் 28, மேக்ஸ்வெல் மற்றும் படிதர் டக் அவுட்டாகினர். சென்னை அணி தரப்பில் முஸ்தஃபிஸூர் ரஹ்மான் 4, தீபக் சாகர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் RCB அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது 12 ஒவரில் 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கோலி 21, டு பிளெசிஸ் 38, கேமரூன் க்ரீன் 18, மேக்ஸ்வெல் (0), படிதார் (0) ரன்கள் எடுத்தனர். CSK அணியில் முஸ்தாஃபிர் ரஹ்மான் 4, தீபக் சாஹர் 1 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர். இன்று ஆர்சிபி எவ்வளவு ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?

ஆர்சிபி அணி 6 ஓவர்களில் 42/3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஆர்சிபி கேப்டன் டூபிளெசிஸ் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த படிதார் (0), மேக்ஸ்வெல் (0) ரன்கள் ஏதும் எடுக்காமல் இருவரும் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். முஸ்தாஃபிர் ரஹ்மான் 2, தீபக் சாஹர் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தோனி 2 கேட்ச் பிடித்ததும் மைதானத்தில் விசில் பறந்தது.

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 நாள் ED காவல் வழங்கப்பட்டுள்ளது. நேற்று அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், அதைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 28ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
Sorry, no posts matched your criteria.