News March 22, 2024
சென்னை அணிக்கு 174 ரன்கள் இலக்கு

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி 20 ஓவர்களில் 173/6 ரன்கள் குவித்துள்ளது. ஆரம்பத்தில் ஆர்சிபி 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் தினேஷ் கார்த்திக் -அனுஜ் ராவத் ஜோடி சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. அனுஜ் 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 38 ரன்கள் விளாசினர். சிஎஸ்கே சார்பில் முஸ்தாஃபிர் ரஹ்மான் 4, தீபக் சாஹர் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Similar News
News November 15, 2025
டெல்லி சம்பவம்: டாக்டர்களின் அங்கீகாரம் ரத்து

டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 டாக்டர்களின் அங்கீகாரத்தையும் தேசிய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குண்டு வெடிப்பு வழக்கில் முசாஃபர் அகமது, அதில் அகமது ராதெர், முஷாமில் ஷகீல், ஷாகீன் சயீத் உள்ளிட்ட 4 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் NIA தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
News November 15, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News November 15, 2025
Sports Roundup: வில்வித்தையில் இந்தியா அபாரம்

*அயர்லாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் 47 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி. *Kumamoto மாஸ்டர்ஸ் பேட்மிண்டனில் அரையிறுதிக்கு லக்ஷயா சென் தகுதி. *ஆசிய வில்வித்தையில் 6 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம். *இலங்கைக்கு எதிரான 2-வது ODI-ல் பாகிஸ்தான் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி. *KKR வீரர் மயங்க் மார்கண்டே, MI அணிக்கு டிரேட் செய்யப்பட்டுள்ளார்.


