India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செந்தில் பாலாஜி வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ED-க்கு அமர்வு நீதிபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ED வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட இருந்த நிலையில், மீண்டும் வாதங்களை முன்வைக்க அவர் அனுமதி கோரினார். இதை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ED-க்கு உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

2024ஆம் ஆண்டு TANCET தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. எம்பிஏ, எம்சிஏ படிப்புகள் உள்ளிட்ட பிஜி படிப்புகளில் சேர்வதற்காக தமிழ்நாட்டில் மாநில அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வே TANCET. இந்த ஆண்டுக்கானத் தேர்வு கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான முடிவை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. tancet.annauniv.edu. என்ற இணையதளத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை அறிய பலர் முயற்சிக்கின்றனர். இதற்கு https://voters.eci.gov.in/ என்ற தளத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ள தேடல் என்பதைக் கிளிக் செய்யவும். EPIC/விவரங்கள்/மொபைல் எண் மூலம் எளிதாகச் சரிபார்க்கலாம். VOTER HELPLINE ஆப் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். பெயர் இல்லை என்றால் தாசில்தார் அலுவலகத்தில் படிவம்-6 மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு சின்னம் ஒதுக்கவில்லை என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். சின்னம் ஒதுக்காததால், இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “2 மாதத்துக்கு முன்பே சின்னம் கேட்டேன். நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக சின்னம் ஒதுக்கவில்லை” என்று தெரிவித்தார்.

வருமான வரித்துறைக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2014 -2017 வரையிலான 4 ஆண்டுகால காங்கிரஸ் வரவு செலவு கணக்கை மறு ஆய்வு செய்ய வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

2024-25ஆம் கல்வியாண்டு முதல், பிஎச்டி (PhD) படிப்பிற்கு தேசிய தகுதி தேர்வின் (NET) மதிப்பெண்கள் கட்டாயம் என பல்கலைக்கழக மானிய குழு (UGC) அறிவித்துள்ளது. பிஎச்டி படிப்பிற்காக, பல்வேறு பல்கலைக்கழகங்கள் தனித்தனி நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகின்றன. மாணவர்கள் நிறைய தேர்வுகளை எழுத வேண்டி இருப்பதால், அதனை ஒழுங்குபடுத்தும் விதமாக பிஎச்டி படிப்பிற்கு NET மதிப்பெண்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் மற்றும் அவரது மனைவி குர்பீரித் கவுருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது முதல் மனைவியை கடந்த 2015ஆம் ஆண்டில் பகவந்த் சிங் மான் விவாகரத்து செய்தார். இதையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மருத்துவர் குர்பீரித்தை அவர் 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மொகாலியில் உள்ள மருத்துவமனையில் குர்பீரித்துக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஒரே அணிக்காக அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியல்:
▶விராட் கோலி (RCB) – 224, ▶எம்.எஸ்.தோனி (CSK) – 205, ▶கிரண் பொல்லார்ட் (MI) – 189, ▶ரோஹித் ஷர்மா (MI) – 183, ▶சுரேஷ் ரெய்னா (CSK) – 176, ▶ஏ.பி.டிவில்லியர்ஸ் (RCB) – 156, ▶சுனில் நரேன் (KKR) – 149, ▶ரவீந்திர ஜடேஜா (CSK) – 143, ▶ஹர்பஜன் சிங் (MI) – 136, ▶லசித் மலிங்கா (MI) – 122 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத்தை விமர்சித்தவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து காங்கிரஸ் நீக்கியுள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட்வை அக்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கங்கனாவை விமர்சித்து அவர் சர்ச்சைக்குரிய பதிவு வெளியிட்டதாக கூறி கண்டனம் எழவே, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதனால் வேட்பாளர் பட்டியலில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

சூர்யா நடித்த ‘அஞ்சான்’ திரைப்படம், விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். சென்னை கமலா திரையரங்கில் ‘பையா’ திரைப்படம் நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அதனை ரசிகர்களுடன் கண்டு ரசித்த லிங்குசாமி, அஞ்சான் படத்தின் தோல்விக்கு காரணம் அதன் நீளம் தான். அதனால் படத்தை ரீ-எடிட் செய்து, ரிலீஸ் செய்யப் போகிறேன்” எனக் கூறியது சூர்யா ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தி உள்ளது.
Sorry, no posts matched your criteria.