News March 28, 2024
பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை பிறந்தது

பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் மற்றும் அவரது மனைவி குர்பீரித் கவுருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது முதல் மனைவியை கடந்த 2015ஆம் ஆண்டில் பகவந்த் சிங் மான் விவாகரத்து செய்தார். இதையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மருத்துவர் குர்பீரித்தை அவர் 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மொகாலியில் உள்ள மருத்துவமனையில் குர்பீரித்துக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
Similar News
News January 25, 2026
ஜனவரி 25: வரலாற்றில் இன்று

*1980 – அன்னை தெரேசாவிற்கு இந்தியாவின் பாரத ரத்னா என்ற மிக உயரிய விருது வழங்கப்பட்டது. *1971 – இந்தியாவின் 18-வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. *1949 – முதலாவது எம்மி விருதுகள் வழங்கப்பட்டன. *1999 – மேற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். *1994 – நாசாவின் ‘கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
News January 25, 2026
30,000 பேரை பணிநீக்கம் செய்யும் அமேசான்

தனது நிர்வாக கட்டமைப்பைச் சீரமைக்கும் நோக்கில், மொத்தமாக 30,000 கார்ப்பரேட் பணியிடங்களைக் குறைக்க அமேசான் திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த 2 வாரங்களில் தலா 15,000 ஊழியர்கள் வெளியேற உள்ளனர். இது அமேசான் வரலாற்றிலேயே மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அந்நிறுவன சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி கூறுகையில், தேவையற்ற நிர்வாக அடுக்குகளை குறைப்பதே இதன் முக்கிய நோக்கம் என கூறியுள்ளார்.
News January 25, 2026
நோ காஸ்ட் EMI… எச்சரிக்கும் நிபுணர்கள்!

நம்மில் பலரும் ‘No Cost EMI’ மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்கினால், வட்டி இருக்காது என நினைக்கிறோம். ஆனால், பொருட்களின் விலையில் வட்டி சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக, செயலாக்க கட்டணம் + ஜிஎஸ்டியை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் அதிக கால EMI காரணமாக, கடன் பயன்பாட்டு விகிதம் அதிகரித்து CIBIL ஸ்கோர் குறையலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.


