India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பல்வேறு அமைப்பினர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு நரிக்குறவர் சமுதாய சங்கத் தலைவர் பீட்டர் உட்பட பல்வேறு அமைப்பினர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னதாக வணிகர் சங்கங்கள் பேரமைப்பும் ஆதரவு தெரிவித்திருந்தது.

இந்தியாவின் வெப்பமான நாள்கள் தொடங்கியிருக்கும் நேரத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே மாதத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு விகிதத்தை வெயில் பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. வழக்கமாக வெயில் காலங்களில்தான் தேர்தல் நடக்கும் என்றாலும், இம்முறை வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கூகுள் மூலம் ஆன்லைனில் அளிக்கப்பட்ட விளம்பரங்களுக்கு காங்கிரஸ் கட்சி ₹8.12 கோடி செலவிட்டுள்ளது. இதுதொடர்பாக கூகுள் புள்ளியியல் மையத்தில் இருக்கும் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை 736 ஆன்லைன் விளம்பரங்களுக்கு காங்கிரஸ் ₹8.12 கோடி செலவிட்டுள்ளதாகவும், மகாராஷ்டிராவில் மட்டும் ₹2.32 கோடி செலவிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகத்தை பொலிவாக காட்ட பவுண்டேஷன் மிகவும் அவசியம். அதிலும் நேர்த்தி குறைவான சருமம் இருந்தால் பவுண்டேஷன் மிகவும் அவசியமாகிறது. வெளியே செல்லும் போது வியர்வை, ஈரப்பதம் பவுண்டேஷனை பாதிக்காமல் இருக்க பவுடர் கொண்டு டச்சப் செய்ய வேண்டும். கண் இமைகள் புத்துணர்ச்சியாக இருக்க மஸ்காரா பயன்படுத்தலாம். 4 மணி நேரத்திற்கு ஒரு முறை பிடித்த வண்ணத்தில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

ஐ.டி ரெய்டு நடத்தி விசிக தலைவர் திருமாவளவனை பாஜக குறிவைக்கிறது என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பாஜகவை எதிர்க்கும் அவர் எம்.பி-யாவதை டெல்லி மேலிடம் விரும்பவில்லை. எனவே தேர்தல் பணிகளை முடக்கும் நோக்கில் ரெய்டு நடத்துகிறது. இந்த அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் விசிக அஞ்சாது என்றார்.

கூகுள் மூலம் ஆன்லைனில் அளிக்கப்பட்ட 80,667 விளம்பரங்களுக்கு பாஜக ₹39.41 கோடி செலவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை அக்கட்சி அளித்த விளம்பரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் உத்தர பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தலா ₹2 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளதாகவும், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மட்டும் ₹3.38 கோடி செலவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரஷ்யா தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த கூகுள் நிறுவனத்திற்கு ₹408 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சட்ட திட்டங்களுக்கு புறம்பான தற்பாலின ஈர்ப்பு & உக்ரைன் போர் உள்ளிட்டவை குறித்து தகவல்களை பரப்பும் யூடியூப் வீடியோக்களை நீக்குமாறு கூகுளுக்கு மாஸ்கோ நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில், அதற்கு கூகுள் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, இந்த அபராதத்தை நீதிமன்றம் விதித்துள்ளது.

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி திகார் சிறையில் இருக்கிறார். இந்நிலையில், இதே வழக்கில் தற்போது அவரை கைது செய்துள்ள சிபிஐ, காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை என்று ஐஜேகே கட்சி நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் தொகுதியில் பாஜக சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் அவர், பல இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அரசியலுக்கு பணம் சம்பாதிக்க வரவில்லை, சேவை செய்யவே வந்திருக்கிறேன் என்றார். ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

▶2008 ஷான் மார்ஷ்- 616 ▶2009 மேத்யூ ஹைடன்- 572 ▶2010 சச்சின்- 618 ▶2011 கிறிஸ் கெயில்- 608 ▶2012 கிறிஸ் கெயில்- 733 ▶2013 மைக்கேல் ஹசி- 733
▶2014 ராபின் உத்தப்பா- 660 ▶2015 டேவிட் வார்னர்- 562 ▶2016 விராட் கோலி- 973 ▶2017 டேவிட் வார்னர்- 641 ▶2018 கேன் வில்லியம்சன்- 735 ▶2019 டேவிட் வார்னர்- 692 ▶2020 கே.எல்.ராகுல்- 670 ▶2021 ருதுராஜ்- 590 ▶2022 டு பிளெசிஸ்- 730 ▶2023 ஷுப்மன் கில்- 890
Sorry, no posts matched your criteria.