news

News March 20, 2024

7 ஆண்டுகளுக்கு தோல்வி படங்களையே கொடுத்த நடிகர்

image

இந்தி நடிகர் சயீப் அலிகான், 7 ஆண்டுகளுக்கு தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்துள்ளார். பட்டோடி ராஜ குடும்பத்தை சேர்ந்த அவர், முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடியின் மகன் ஆவார். 2013ல் ரேஸ் 2 வெற்றி படத்தை கொடுத்த அவர், பிறகு 2020 வரை 10 தோல்வி படங்களையே அளித்திருக்கிறார். 2020ல் வெளியான தான்ஹாஜி, சூப்பர் ஹிட் அடித்தது. சேக்ரட் கேம்ஸ், தான்டவ் ஆகிய சீரிஸ் வரவேற்பை பெற்று தந்தது.

News March 20, 2024

ஐஜேகேவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

image

பாஜக கூட்டணியில் ஐஜேகேவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக தலைமையில் தமிழகத்தில் அக்கட்சி புதிய அணியை கட்டமைத்து வருகிறது. கூட்டணியில் உள்ள பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏற்கெனவே தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதியை பாஜக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 20, 2024

அமலாக்கத்துறையை கண்டித்த உச்சநீதிமன்றம்

image

ED விசாரணையின்றி ஒருவரை கைது செய்து நீண்ட நாட்கள் சிறையில் வைத்திருக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜார்கண்டை சேர்ந்த ஒருவர் 18 மாதங்களாக விசாரணையின்றி தன்னை அமலாக்கத்துறை கைது செய்து வைத்திருப்பதாக கூறி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. 90 நாட்களுக்குள் விசாரணையை நிறைவு செய்யாவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமின் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 20, 2024

சூட்கேஸில் பெண் சடலம்

image

ஏற்காடு மலைப் பாதையில் சூட்கேஸிலிருந்து பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 அடி பாலம் அருகில் துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற அவர்கள், அங்கு கிடந்த சூட்கேஸை கைப்பற்றி பார்த்தபோது அதில் பெண் சடலம் ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 20, 2024

அதிமுக-புரட்சி பாரதம் கூட்டணி முறிவு?

image

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்பட்டதால் புரட்சி பாரதம் கட்சி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் திருவள்ளூர் தொகுதியை அக்கட்சி எதிர்பார்த்த நிலையில், அந்த தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அக்கட்சியின் அவசரக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுகவுக்கான ஆதரவை திரும்ப பெறவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 20, 2024

அதிக Followers-களை கொண்ட ஐபிஎல் அணிகள்

image

இன்ஸ்டாகிராமில் அதிக Followers-களை கொண்ட ஐபிஎல் அணிகள்:
▶சென்னை – 14.2 மில்லியன்,
▶பெங்களூரு – 13.1 மில்லியன்,
▶மும்பை – 12.7 மில்லியன்,
▶கொல்கத்தா – 4.6 மில்லியன்,
▶டெல்லி- 3.7 மில்லியன்,
▶குஜராத் – 3.6 மில்லியன்,
▶ராஜஸ்தான் – 3.6 மில்லியன்,
▶ஐதராபாத் – 3.4 மில்லியன்,
▶பஞ்சாப் – 3.1 மில்லியன்,
▶லக்னோ – 3 மில்லியன்

News March 20, 2024

முக்கியமான அறிவிப்பு நாளை வெளியாகும்

image

நாளை மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக, விருதுநகர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு கூடியுள்ளது.

News March 20, 2024

ஒரு மணி நேரம் விளக்கை அணைத்து வையுங்கள்

image

நாடு முழுவதும் வருடத்திற்கு ஒருமுறை புவி நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் 23ஆம் தேதி இரவு 8.30 முதல் 9.30 மணி வரை மக்கள் அனைவரும் விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பை குறைக்கும் இந்த முயற்சியில், மக்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News March 20, 2024

இளையராஜா ஒரு வாழும் அதிசயம்

image

இளையராஜா ஒரு நினைவுச் சின்னம். அவரது மூச்சு பேச்சு எல்லாமே இசைதான் என இயக்குநர் பாரதிராஜா புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இளையராஜாவை நான் அதிசயமாகவே இன்று வரை பார்த்து வருகிறேன். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அவரை உலகம் மறக்காது. யார் ராஜாவாக இருந்தாலும் தோற்று விடுவார்கள். ஆனால், இவன் ஜெயிக்க மட்டுமே பிறந்தவன். இந்திய அரசு ராஜாவுக்கு பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும்” என்றார்.

News March 20, 2024

சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி

image

அதிமுகவுடன் வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி தொடரும் என பிரேமலதா தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டுக்கு பிறகு பேசிய அவர், “அதிமுக-தேமுதிக கூட்டணி மிகவும் ராசியான அணி. 2011க்கு பிறகு மீண்டும் அது பூத்துள்ளது. இந்த கூட்டணி வெற்றி கூட்டணி என்பது தேர்தலுக்கு பிறகு அனைவரும் அறிவார்கள். தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்” என்றார்.

error: Content is protected !!