News March 28, 2024

RR ரசிகர்களை ஏமாற்றும் பட்லர்

image

ஹிட்டர் பேட்ஸ்மேன் பட்லர் தொடர்ந்து சொதப்பி வருவது RR ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. LSG அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 11 ரன்கள் அடித்த பட்லர், DC-க்கு எதிரான இன்றைய போட்டியிலும் 11 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதுதவிர, கடந்த சீசனில் கடைசி 3 போட்டிகளிலும் அவர் டக்கவுட்டானார். இதனால், IPL-ல் கடந்த 5 போட்டிகளில் அவர் மொத்தம் அவர் 22 ரன்கள் மட்டுமே எடுத்தது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

Similar News

News January 16, 2026

பட வாய்ப்புகள் குறைந்ததா? கடுப்பான ARR

image

1990-களில் தான் சிறந்த இசையை கொடுத்ததாக பலரும் தன்னிடம் வந்து சொல்வதாக AR.ரஹ்மான் தெரிவித்துள்ளார். அப்படியென்றால், இப்போது நான் சிறப்பான இசையை வழங்கவில்லையா என முட்டாள்தனமான கேள்வி எழுகிறது. பாலிவுட் படமான ‘ராமயானா’, சொந்த இசைக் குழு, மணி ரத்னம் படங்கள் என கமிட்மெண்ட் நிறைய இருப்பதால், குறைவான படங்களுக்கு மட்டும்தான் தற்போது இசையமைக்கிறேன் என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

News January 16, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 582 ▶குறள்: எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். ▶பொருள்: நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.

News January 16, 2026

₹9.20 கோடியை வேண்டாம் என சொன்ன வீரர்

image

இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவு விரிசல் காரணமாக, ₹9.20 கோடிக்கு எடுக்கப்பட்ட BAN வீரர் <<18778953>>முஸ்தஃபிசுர் ரஹ்மானை<<>> KKR விடுவித்தது. கிரிக்கெட் அல்லாத காரணங்களுக்காக அவர் விடுவிக்கப்பட்டதால், இதை சட்டரீதியாக எதிர்கொண்டு இழப்பீடு பெறலாம் என உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கம் முன்வந்துள்ளது. ஆனால், முஸ்தபிசுர் அதை வேண்டாம் என மறுத்ததால், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் BCB இறங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!