India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். திருச்சி சிறுகனூரில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திருச்சி, பெரம்பலூர் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். பிரமாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

▶மார்ச் 22 ▶பங்குனி – 9 ▶கிழமை: வெள்ளி ▶ திதி: திரயோதசி ▶நல்ல நேரம்: காலை 09.30 – 10.30, மாலை 02.00 – 03.00 ▶கெளரி நேரம்: காலை 12.30 – 01.30, மாலை 06.30 – 07.30 ▶ராகு காலம்: காலை 10.30 – 12.00 ▶எமகண்டம்: மாலை 03.00 – 04.30 ▶குளிகை: காலை 07.30 – 09.00 ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ஐ.பி.எல் தொடரின் 17ஆவது சீசன் இன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. முன்னதாக, மாலை 6.30 மணிக்கு கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறும் தொடக்க விழாவில், ஏ.ஆர்.ரஹ்மான், அக்ஷய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

சென்னையில் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு, இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. இதுகுறித்து அவரது மகன் நிகில் தனது X பக்கத்தில், என் தந்தைக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் வெற்றிகரமாக இதய அறுவை சிசிச்சை நடைபெற்றது. அனைவரது பிரார்த்தனையால் அவர் நலமாக உள்ளார். அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றி என பதிவிட்டார். குமாரசாமிக்கு ஏற்கெனவே 2 முறை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 208 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சென்னையில் உரிமம் பெறப்பட்ட 21,229 துப்பாக்கிகளில் இதுவரை 15,113 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் 962 நபர்களுக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகுவது குறித்து போட்டோஷூட்டுக்கு முன்னரே தனக்கு தெரியவந்ததாக சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், தோனி விலகியது குறித்து அவர், ‘தோனி எதை செய்தாலும், அணியின் நலனை மனதில் வைத்து தான் இருக்கும். அவருடைய முடிவுக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும்’ என்றார்.

அமெரிக்க ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் ஏகபோகத்துடன், போட்டியைச் சீர்குலைப்பதாக ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் அமெரிக்க அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், இதில் வாடிக்கையாளர்கள் மற்றும் டெவலப்பர்கள் உள்நுழைய கட்டுப்பாட்டை ஆப்பிள் நிறுவனம் தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அரசின் குற்றச்சாட்டுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பூமியில் உள்ள அனைத்து உயிரினங்கள் உயிர் வாழத் தண்ணீர் அவசியம். தண்ணீரிலிருந்து தான் உயிரின தோற்றங்கள் உருவாகியதாக ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது. இயற்கையின் கொடையான தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தத் தவறினால், எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கை கேள்விக்குறி தான்.!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டாலும், டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் தொடர்வாரென ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. சிறையில் இருந்து முதல்வராக கெஜ்ரிவால் பணியாற்றுவது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று. இருப்பினும், 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஏதேனும் வழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டால் மட்டுமே பதவியை விட்டு நீக்க முடியும். அதுவரை கெஜ்ரிவால் முதல்வராக தொடர தடை இருக்காது.

➤1945 – அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது. ➤ 1960 – ஆர்தர் ஷாவ்லொவ் மற்றும் சார்லஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தை பெற்றனர். ➤1982 – நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது. ➤1993 – இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்-ஐ அறிமுகம் செய்தது. ➤1995 – சோவியத் விண்வெளி வீரர் வலேரி பொல்யாக்கொவ் விண்ணில் 438 நாட்கள் கழித்துவிட்டு பூமி திரும்பினார்.
Sorry, no posts matched your criteria.