News March 25, 2024
பாண்டியாவுடன் ரோஹித் வாக்குவாதம்?

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பாண்டியாவுடன் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி போராடி தோல்வியடைந்தது. போட்டிக்கு பிறகு பின்னாலிருந்து வந்து கட்டி அணைத்த பாண்டியாவை சட்டென தள்ளிய ரோஹித், அவருடன் வாக்குவாதம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Similar News
News November 7, 2025
ரூட்டை மாற்றும் ரிலையன்ஸ்

கச்சா எண்ணெயை சுத்திகரித்து பெட்ரோல், டீசலாக விற்று வந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், தற்போது கச்சா எண்ணையையே விற்கத் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள தனது கச்சா எண்ணெய் சரக்கை கிரீஸ், இந்திய நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. ரஷ்ய எண்ணெய் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையில் இருந்து தப்பிக்க அல்லது புதிய பிசினஸ் உத்தியாக ரிலையன்ஸ் இந்த உத்தியை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
News November 7, 2025
விஜய் பலவீனமானவர்: அப்பாவு

கரூர் விவகாரத்தில் CM ஸ்டாலின் பெருந்தன்மையாக நடந்து கொண்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மேலும், விஜய் பலவீனமானவர் என தெரிவித்த அவர், ஒரு பிரச்னை என்றவுடன் அவரும் அவருடன் உள்ளவர்களும் ஓடி ஒளிந்து கொண்டார்கள் எனவும் கூறியுள்ளார். பலவீனமானவர்கள் தன்னை வீரன் என காட்டிக் கொள்ள எதையாவது சொல்லிக் கொள்வார்கள், அதைத்தான் விஜய் செய்து வருகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.
News November 7, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.7) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..


