news

News March 29, 2025

இதுதான் மிக வேகமான அரைசதம்

image

முதல் ஒருநாள் போட்டியிலேயே மிக வேகமாக அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையை நியூசிலாந்தின் முகமது அபாஸ் பெற்றிருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில், அவர் 24 பந்துகளில் அரைசதம் கடந்தார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவரான முகமது அபாசுக்கு வெறும் 21 வயதுதான் ஆகிறது. முன்னதாக, இந்தியாவின் க்ருனால் பாண்டியா (26 பந்துகள்) இந்த சாதனையை தன்வசம் கொண்டிருந்தார்.

News March 29, 2025

மியான்மரில் மீண்டும் நில நடுக்கம்

image

நிலநடுக்கத்தால் மியான்மரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், இன்று மாலை அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், தங்குமிடம், உடைமைகளை இழந்து சாலைகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நேற்று முதல் அடுத்தடுத்து அங்கு நில நடுக்கம் ஏற்பட்டு வருவதால், மக்கள் பீதியில் உள்ளனர். இருப்பினும், இடிபாடுகளில் சிக்கியிருப்போரை மீட்கும் பணிகள் துரித கதியில் நடக்கின்றன.

News March 29, 2025

கோயில்களில் சாதி பெயருடன் விழா கூடாது – ஐகோர்ட்

image

கோயில் திருவிழாக்களில் சாதி பெயரால் ஏற்படும் மோதல்கள் ஏராளம். இதனை தடுக்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, கோயில்களில் திருவிழா நடத்த ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு நாள் ஒதுக்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பக்தர்கள், ஊர் மக்கள் என்ற அடிப்படையில் விழா நடத்த அனுமதிக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

News March 29, 2025

இஸ்லாமியர்களுக்காக முதலில் குரல் கொடுப்பது திமுக: CM

image

இஸ்லாமியர்களையும் திமுகவையும் யாராலும் பிரிக்க முடியாது என சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சிறுபான்மையினருக்கு எந்த பிரச்னை வந்தாலும் முதலில் குரல் கொடுக்கும் கட்சி திமுக தான் எனவும் கூறினார். குடியுரிமை திருத்த சட்டம், வக்ஃப் வாரிய திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை திமுகதான் முதலில் எதிர்த்ததாகவும் தெரிவித்தார்.

News March 29, 2025

விரைவில் ஆலய நுழைவு போராட்டம்: சீமான் ஆவேசம்

image

விழுப்புரம் மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் மக்கள் வழிபட அரசு அனுமதிக்காவிட்டால் விரைவில் ஆலய நுழைவு போராட்டத்தை நாதக முன்னெடுக்கும் என சீமான் தெரிவித்துள்ளார். மூடப்பட்ட கோவிலை திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு அனுமதி கொடுக்காதது கண்டனத்திற்குரியது எனவும் விமர்சித்துள்ளார். இருதரப்பு மக்களிடமும் இணக்கத்தை ஏற்படுத்தாமல் கோயிலை மூடிவைப்பது நியாயமா? எனவும் கேட்டுள்ளார்.

News March 29, 2025

சனிப்பெயர்ச்சி: நற்பலன்கள் பெற பொதுவான பரிகாரங்கள்

image

சனிப்பெயர்ச்சி பரிகாரம்: *தினசரி விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலன் தரும். *விநாயகர் அகவல், ஹனுமான் சாலீசா, சுந்தரகாண்டம் பாராயணம் ஆகியவற்றை தினமும் மேற்கொள்ளலாம். *அவ்வப்போது கணபதி ஹோமம் (அ) பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்யலாம். *தினமும் முன்னோர்கள் வழிபாடு செய்வது (குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது). *தினமும் காகத்திற்கு சாதம் வைப்பதும் சிறந்த பரிகாரமாகும் என்கின்றனர் நம்பிக்கையுள்ளோர்.

News March 29, 2025

பழம்பெரும் பாடகி காலமானார்

image

அசாமை சேர்ந்த பழம்பெரும் பாடகி ஹீரா தாஸ் (73) காலமானார். பிரபல இசையமைப்பாளர் ஜே.பி.தாஸின் மனைவியான இவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது. அசாமிய மொழியில், காலத்தால் அழியாத எண்ணற்ற பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்த அவரது மரணத்துக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News March 29, 2025

அன்று வங்கதேசம்; இன்று நேபாளம்?

image

நேபாளத்தில் கடந்த 2 நாட்களாக நடந்துவரும் வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 100-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடுத்த வாக்குறுதிகளை ஆளுங்கட்சி நிறைவேற்றவில்லை என்பதால் மீண்டும் மன்னராட்சி வேண்டுமென்று எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் வங்கதேசத்தில் நடந்த ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அந்நிய சக்திகள் இருந்தன. இதிலும் அப்படி இருக்குமோ?

News March 29, 2025

குஜராத் அணி முதலில் பேட்டிங்…!

image

ஹர்திக் பாண்டியா தலைமையிலான MI அணியும், கில் தலைமையிலான GT அணியும் அகமதாபாத் மைதானத்தில் சற்றுநேரத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் வெற்றிக் கணக்கைத் தொடங்கவில்லை. இதனால், இந்த போட்டியில் வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும். இதுவரை 5 போட்டிகளில் நேருக்குநேர் மோதி, GT 3 முறையும் MI 2 முறையும் வென்றுள்ளன. இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பாங்க?

News March 29, 2025

தமன்னாவுக்கு பிரேக்கப்? காதலனின் சுவாரஸ்ய பதில்

image

தமன்னாவுக்கும் அவரது காதலன் விஜய் வர்மாவுக்கும் பிரேக்கப் ஆனதாக சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் ரிலேஷன்ஷிப் குறித்து சுவாரஸ்யமான பதிலை வர்மா அளித்துள்ளார். ஐஸ்கிரீமை சுவைப்பது போல் ரிலேஷன்ஷிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும் சில நேரம் இனிக்கும், சில சமயம் உப்பாக இருக்கும் என கூறியுள்ளார். எதுவானாலும் அனுபவித்து கடந்து செல்ல வேண்டும் என வர்மா கூறியுள்ளார்.

error: Content is protected !!